ஆம்பூர் அருகே மலை மீது 7 ஆண்டுகளாக பொதுமக்கள் வைத்து வழிப்படும் முருகனின் வேலை சேதப்படுத்திய மர்ம நபர்கள்,

ஆம்பூர் அருகே மலை மீது 7 ஆண்டுகளாக பொதுமக்கள் வைத்து வழிப்படும் முருகனின் வேலை சேதப்படுத்திய மர்ம நபர்கள்,
X
ஆம்பூர் அருகே மலை மீது 7 ஆண்டுகளாக பொதுமக்கள் வைத்து வழிப்படும் முருகனின் வேலை சேதப்படுத்திய மர்ம நபர்கள்,
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே மலை மீது 7 ஆண்டுகளாக பொதுமக்கள் வைத்து வழிப்படும் முருகனின் வேலை சேதப்படுத்திய மர்ம நபர்கள், புகாரின் பேரில் ஆம்பூர் நகர காவல்துறையினர் விசாரணை.. திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நகராட்சிக்குட்பட்ட கம்பிக்கொல்லை பகுதியில் உள்ள நாம மலை என்று சொல்லக்கூடிய மலைப்பகுதியில், ஆம்பூரை சுற்றியுள்ள பொதுமக்கள் மலைப்பகுதியில், கடந்த 7 ஆண்டுகளாக முருகனின் வேலை மட்டும் வைத்து பூஜை செய்து வழிப்பாடு செய்து வரும் நிலையில், இந்த முருகனின் வேலை மர்ம நபர்கள் சிலர் சேதப்படுத்தியுள்ளனர், இந்நிலையில் இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த ஆம்பூர் நகர காவல்துறையினர் முருகனின் வேல் சேதப்படுத்தப்பட்ட இடத்தை நேரில் ஆய்வு செய்து, கோவில் நிர்வாகிகள் அளித்த புகாரின் பேரில் இச்சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்து விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.. அதனை மர்மநபர்கள் சேதப்படுத்திய வேலை கோவில் நிர்வாகிகள் மீட்டு பூஜை செய்வதற்காக கொண்டு சென்றனர்.. மேலும் மலைமீது பொதுமக்கள் வழிப்பட்டு வந்த வேலை மர்ம நபர்கள் சேதப்படுத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..
Next Story