சேலத்தில் பஸ்சில் பெண்ணிடம் 7½ பவுன் நகை திருட்டு

X
சேலம் எருமாபாளையத்தை சேர்ந்தவர் சண்முகவடிவு (வயது 48). இவர் சம்பவத்தன்று அரசு டவுன் பஸ்சில் புதிய பஸ் நிலையத்தில் இருந்து சுவர்ணபுரிக்கு சென்று கொண்டிருந்தார். பின்னர் பஸ்சை விட்டு இறங்கி தன்னிடம் இருந்த பையை பார்த்த போது அதில் வைத்திருந்த 7½ பவுன் நகைகள் திருட்டு போனது தெரிந்தது. இது குறித்து அவர் பள்ளப்பட்டி போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story

