கும்பகோணம் அரசு ஆண்கள் கல்லூரியில் மார்ச் 7-ம் தேதி வளாக நேர்காணல்

X
கும்பகோணம் அரசு ஆண்கள் கல்லூரியில் மார்ச் 7-ஆம் தேதி மாணவ, மாணவிகளுக்கு வளாக நேர்காணல் நடைபெற உள்ளது என கல்லூரி முதல்வர் அ.மாதவி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தெரிவித்துள்ளது: கும்பகோணம் அரசு ஆண்கள் கல்லூரியில் மார்ச் 7-ம் தேதி வளாக நேர்காணல் நடைபெறுகிறது. இந்த நேர்காணல் முகாமில் சென்னை, ஈரோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 10 -க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கேற்கின்றன. இதன் மூலம் ஆயிரம் மாணவ, மாணவிகள் பயன்பெறுவர். முகாமுக்கான ஏற்பாடுகளை வேதியியல் துறைத் தலைவர் மா.மீனாட்சிசுந்தரம், இந்திய பண்பாடு மற்றும் சுற்றுலாவியல் துறைத் தலைவர் சீ.தங்கராஜ், கல்லூரி வேலைவாய்ப்பு ஒருங்கிணைப்பாளர் சா.ரமேஷ் ஆகியோர் செய்து வருகின்றனர். இந்த முகாமில், கல்லூரியில் பட்ட வகுப்பில் இறுதியாண்டு படிக்கும் மாணவர்கள், கல்லூரியில் பயின்று வேலைக்காகக் காத்திருக்கும் பட்டம் பெற்ற மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு பயன்பெறலாம் எனத் தெரிவித்துள்ளார்.
Next Story

