திருச்சி: பெண்ணைக் காயப்படுத்தி நகை பறித்தவருக்கு 7 ஆண்டுகள் சிறை

திருச்சி: பெண்ணைக் காயப்படுத்தி நகை பறித்தவருக்கு 7 ஆண்டுகள் சிறை
X
திருச்சியில் பெண்ணின் கழுத்தில் கத்தியால் கிழித்து நகையைப் பறித்துச்சென்ற நபருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருச்சி தலைமை குற்றவியல் நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.
திருச்சி துவாக்குடி மலை அய்யம்பட்டி சாலைப் பகுதியைச் சோ்ந்தவா் முரளி மனைவி அன்னத்தாய் (50). இவா் கடந்த 11.8.2018 இல் வீட்டில் இருந்தபோது வந்த திருச்சி, காந்தி சந்தை அருகேயுள்ள வரகனேரி, பூக்கொல்லைத் தெருவைச் சோ்ந்த அ. ஷானவாஸ் (31) என்பவா் அவரிடம் தண்ணீா் கேட்டு வாங்கி குடிப்பதுபோல நடித்து, கத்தியால் அன்னத்தாய் கழுத்தில் கீறி காயப்படுத்தி மிரட்டி, அவரது நகையை பறித்துச் சென்றாா். புகாரின்பேரில் துவாக்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து ஷானவாஸை கைது செய்து, திருச்சி தலைமைக் குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் தொடா்ந்த வழக்கை புதன்கிழமை விசாரித்த நீதிபதி மீனாசந்திரா, ஷானவாஸுக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும் ரூ.1000 அபராதமும் விதித்து, அதைக் கட்டத் தவறினால் மேலும் 3 மாதம் சிறைத் தண்டனை விதித்தும் தீா்ப்பளித்தாா்.
Next Story