ஆரணியில் கத்தி மற்றும் பாட்டிலால் குத்தி இளைஞர் கொலை. 7 பேர் கைது.

X

ஆரணி நகரம், ஆரணிப்பாளையம் பகுதியில் இளைஞரை கத்தியாலும், பாட்டிலாலும் குத்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் 7 பேரை ஆரணி நகர போலீஸார் கைதுசெய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள 2 பேரை தேடி வருகின்றனர்.
ஆரணி நகரம், ஆரணிப்பாளையம் பகுதியில் இளைஞரை கத்தியாலும், பாட்டிலாலும் குத்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் 7 பேரை ஆரணி நகர போலீஸார் கைதுசெய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள 2 பேரை தேடி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி நகரம், ஆரணிப்பாளையம் சாந்தா தெருவை சேர்ந்த ரியல் எஸ்டேட் வியாபாரி அருணகிரி என்பவரின் மகன் விக்னேஷ் என்கிற விக்கி(27) என்பவரும் இவரது நண்பர்கள் பவுன்குமார், சபரி ஆகிய மூவரும் ஒரே மோட்டார் சைக்கிளில் சனிக்கிழமை இரவு ஆரணி-புதுக்காமூர் சாலையில் சென்றுள்ளனர். அங்கு ஒரு கும்பல் மது அருந்திக் கொண்டிருந்ததாகவும், மோட்டார்சைக்கிளின் சென்ற விக்கி என்கிற விக்னேஷ் ஏன் இங்கு மது அருந்துகிறீர்கள் என கேட்டதால் மது அருந்திய கும்பல் கத்தியால் சரமாரியாக முகத்திலும் தலையிலும் வெட்டியும், பீர் பாட்டிலால் மார்பு , வயிற்று பகுதியில் குத்தியுள்ளனர். அப்போது உடன் சென்ற பவுன்குமார் , சபரி ஆகியோர் 108 அவசர ஆம்புலன்ஸ்க்கும், கொலையுண்ட விக்னேஷ் வீட்டிற்கும் , ஆரணி நகர காவல் நிலையத்துக்கும் தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்ததும் அங்கு விரைந்து வந்த ஆரணி டிஎஸ்பி பாண்டிஸ்வரி, ஆரணி நகர இன்ஸ்பெக்டர் விநாயகமூர்த்தி, எஸ்.ஐ சுந்தரேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். மேலும் அங்கு சென்ற 108 அவசர ஆம்புலன்ஸ் வாகனத்தில் இருந்த மருத்துவர்கள் பரிசோதித்ததில் விக்கி என்கிற விக்னேஷ் உயிருடன் இல்லை இறந்துவிட்டார் என்பது உறுதி செய்யப்பட்டது. அதன் பிறகு அவரது உடல் ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு , பின்னர் பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்ததும் திருவண்ணாமலை மாவட்ட எஸ்.பி சுதாகர் நள்ளிரவு நேரத்தில்யே சம்பவ இடத்தை பார்வையிட்டு குற்றவாளிகளை உடனடியாக பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டார். மேலும் அப்பகுதியில் இரவில் சாலைகளில் அமர்ந்து மது அருந்துவதும் , கத்தியோடு சுற்றி திரிவது குறித்து ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என போலீசாரை கேள்வி கேட்டார். விக்கி என்கிற விக்னேஷுடன் சென்ற பவுன்குமார், சபரியிடமும் து தொடர்ந்து விசாரணை நடத்தியதின்பேரிலும்,. இது தொடர்பாக கொலையுண்ட விக்கி என்கிற விக்னேஷின் மனைவி மகாலட்சுமி ஆரணி நகர போலீசில் கொடுத்த புகாரின் பேரிலும் வழக்கறிஞர் கணேசன், அவரது தம்பி ரமேஷ், மற்றும் தனபால், பிரசாந்த் ,அசோக், தினேஷ், கமல், சந்தோஷ், தாமோதரன் ஆகிய 9 பேர் கும்பலாக சேர்ந்து தாக்கியதாக போலீசில் புகார் அளித்தார். புகாரைப் பெற்ற போலீசார் தாமோதரன், கமல் , தனபால், ஆடு என்கிற தினேஷ், சந்தோஷ், பிரசாந்த், அசோக் ஆகிய 7 பேரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள கணேசன், ரமேஷ் ஆகியோரை தேடி வருகின்றனர். சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கொலை வழக்கில் விக்கி என்கிற விக்னேஷ் சம்பந்தப்பட்டுள்ளதாகவும், இதனால் முன் விரோதம் காரணமாக கொலை செய்து இருக்கலாம் என்ற கோணத்திலும் போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.
Next Story