ராமநாதபுரம் வைரம் பறிமுதல் 7 பேர் கைது

வைர வியாபாரியிடம் வழிப்பறி செய்யப்பட்ட 60 லட்சம் மதிப்பிலான வைரக்கல் பறிமுதல். 7 பேரை கைது
ராமநாதபுரத்தில் வைர வியாபாரியிடம் வழிப்பறி செய்யப்பட்ட 60 லட்சம் மதிப்பிலான வைரக்கல் பறிமுதல். 7 பேரை கைது செய்த தனிப்படைக்கு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜி.சந்தீஷ் ஞாயிற்றுக்கிழமை வாழ்த்து தெரிவித்து பாராட்டினார். மதுரை மாவட்டம், கட்சைகட்டி பெருமாள் நகரை சேர்ந்தவர் முனியசாமி 30 வருடங்களாக ஜாதிக்கற்கள் பதிக்கும் வியாபாரம் செய்து வருகிறார். இவரிடம் விலை மதிப்புமிக்க 7 கிராம் அலெக்ஸ்சான்டர் கல் ரசீதுடன் விற்பனைக்கு இருப்பதாக சிவகாசியை சேர்ந்த புரோக்கர் ஜாகீர் என்பவரிடம் தெரிவித்துள்ளார். ஜாகீர் திருநெல்வேலியை சேர்ந்த ரவி என்பவரை அறிமுகப்படுத்தி உள்ளர். இதனைதொடர்ந்து, அபுதாஹீர் என்பவரை கைபேசியல் தொடர்பு கொண்டு முனியசாமியை ராமநாதபுரம் பழைய பேருந்து நிலையம் அருகே ரயில்வே கேட் அருகே வரச்சொல்லி உள்ளனர். அங்கு சென்ற போது 7 பேர் கொண்ட மர்ம நபர்களை பயங்கர ஆயுதங்ளை காட்டி 60 லட்சம் மதிக்கத்தக்க அலெக்ஸாண்டர் ஜாதிக்கல்லை அதன் ரசீது, 15 ஆயிரம் ரொக்க பணத்தை அச்சுருத்தி பறித்து சென்றனர். இது குறித்து முனியசாமி கடந்த ஜனவரி மாதம் 24 ஆம் தேதி ராமநாதபுரம் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜி.சந்தீஷ் உத்தரவின் பேரில் காவல்துறை ஆய்வாளர் க.பொன்தேவி தலைமையில் உதவி ஆய்வாளர் எஸ்.கஜேந்திரன்,எஸ்.கருப்பசாமி,எம்.வசத்தீஸ்வரன்,பி.பாஸ்கரன்,எம்.ஆய்யனார்,முத்துராக்கு,மகேந்திரன்,எஸ்.வீரமுருகன்,நிர்மல்,சுரேஷ் உள்ளிட்ட 11 பேர் கொண்ட சிறப்பு படை அமைக்கப்பட்டது. இதனைதொடர்ந்து, சம்பவ நடந்த இடம், ராமநாதபுரம் நகர் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் ஆய்வு செய்யப்பட்டு தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதில், தேனி பெரியகுளம் பகுதியை சேர்ந்த 1)அபுதாஹிர் (எ) அபு (எ) ஹகிம், 2) இளையான்குடியை சேர்ந்த முகமது அசாருதீன்,3)முகமது நவுபால், 4) தூத்துக்குடியை சேர்ந்த முத்துச்செல்வம்,5)கனகராஜ், 6)கனகராஜ், 7) ராஜா ஜோஸ்குமார் ஆகிய 7 பேரை தனிப்படையினர் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 60 லட்சம் மதிப்பிலான அலெக்ஸ்சான்டர் கல் பறிமுதல் செய்யப்பட்டது.15 ஆயிரம் ரொக்க பணம்,செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். சிறப்பாக செயல்பட்ட தனிப்படையினரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜி.சந்தீஷ் ஞாயிற்றுக்கிழமை நகர் காவல் நிலையத்தில் பொருட்களை காட்சிபடுத்தி வாழ்த்து தெரிவித்து பாராட்டினார்.
Next Story