வீடு புகுந்து பெண்ணிடம் 7 சவரன் செயின் பறிப்பு!

X
பனப்பாக்கத்தை சேர்ந்தவர் பள்ளி தலைமை ஆசிரியை அபிதா 49. இவர் வியாழக்கிழமை இரவு வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்த போது சுடிதார் அணிந்து வந்த கொள்ளையன், அபிதா அணிந்திருந்த ஏழு சவரன் செயினை பறித்துச் சென்றான். இதுகுறித்து நெமிலி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நேற்று எஸ்பி விவேகானந்த சுக்லா, டிஎஸ்பி ஜாபர்சித்திக் பார்வையிட்டனர். போலீஸ் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. மேலும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story

