பெண்ணிடம் நகை பறிக்க முயன்ற தொழிலாளிக்கு 7 ஆண்டு சிறை.

X
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அடுத்துள்ள மட்டாரப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் சுதா (35) இவர் கடந்த 2022-ம் ஆண்டு பிப்-7-ந் தேதி அன்று தனது டூவீலரில் கொண்டப்பநாயனப் பள்ளி அருகே சென்றார். பின்னர் அவர் டூவீலரை நிறுத்தி விட்டு தனது கணவருடன் செல்போனில் பேசிய போது அந்த வழியாக டூ வீலரில் வந்த மர்ம நபர் சுதா கழுத்தில் இருந்த 2 பவுன் தங்க சங்கிலியை பறித்து கொண்டு தப்பி ஓட முயன்ற போது அங்கிருந்த பொதுமக்கள் அந்த நபரை மடக்கி பிடித்து பர்கூர் போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில், அவர் திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்துள்ள காவேரிப்பட்டை சேர்ந்த கூலித்தொழிலாளி தர்மலிங்கம் (45) என்பது தெரியவந்தது. இதை அடுத்து அவரை பர்கூர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு விசாரணை கிருஷ்ணகிரி முதன்மை சார்பு நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் இந்த வழக்கில் இறுதி விசாரணை முடிந்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. அதில் பெண்ணிடம் நகை திருட முயன்ற தர்மலிங்கத்திற்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும் மற்றும் ரூ.1,000 அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்
Next Story

