வாலிபரை கொல்ல முயற்சி: 7பேர் கும்பல் கைது - ஆயுதங்கள் பறிமுதல்!

வாலிபரை கொல்ல முயற்சி: 7பேர் கும்பல் கைது - ஆயுதங்கள் பறிமுதல்!
X
தூத்துக்குடியில் முன் விரோதத்தில் வீடுபுகுந்து பைக்கை அடித்து நொறுக்கி பொருட்களை சேதப்படுத்தியதாக 7பேர் கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடியில் முன் விரோதத்தில் வீடுபுகுந்து பைக்கை அடித்து நொறுக்கி பொருட்களை சேதப்படுத்தியதாக 7பேர் கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி சுந்தரவேல் புரம் 7வது தெருவைச் சேர்ந்தவர் சுப்பையா மகன் அருண்குமார் (22). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் என்பவருக்கும் இடையே முன் விரோதம் இருந்துள்ளது. இரு தரப்பைச் சேர்ந்தவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தாக கூறப்படுகிறது. இந்த நிலையில், பிரகாஷ் ஆதரவாளான கிருஷ்ணராஜபுரம் 8வது தெருவைச் சேர்ந்த லிங்கதுரை மகன் முத்துசிவா (23) என்பவரை கொலை செய்வதற்காக அவர தேடி அண்குமார் உட்பட 7பேர் கொண்ட கும்பல் அவரது வீட்டிற்கு சென்றுள்ளனர். அவர் அங்கு இல்லாததால் அவரது பைக் மற்றும் வீட்டில் இருந்த பொருட்களை அடித்து நொறுக்கி சேதப்படுத்தினார்களாம். இது குறித்து முத்து சிவா அளித்த புகாரின் பேரில் வடபாகம் காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். இது தொடர்பாக அருன்குமார், தாளமுத்துநகர் ராம்தாஸ் நகர் மகாலிங்கம் மகன் சுடலை (25), கந்தசாமி புரம் முருகன் மகன் கரன் (24), சுந்தரவேல் புரம் 5வது தெரு, கோபாலகிருஷ்ணன் மகன் கார்த்திக் (20), வேப்பலோடை நடராஜபுரம் காளிமுத்து மகன் தங்கமாரியப்பன் (26), சுந்தரவேல்புரம் 3வது தெரு சங்கர் மகன் செல்வமணி (20), சுந்தரவேல்புரம் 7வது தெரு ஆறுமுக நயினார் மகன் வீரமணி (26) ஆகிய 7பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் அவர்களிடம் இருந்து அரிவாள், கத்தி போன்ற ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டுள்ள 7பேர் மீதும் பல வழக்குகள் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Next Story