உழைக்கும் மக்கள் விடுதலை கழகம் அரசியல் எழுச்சி மாநாட்டில் 7- தீர்மானங்கள் நிறைவேற்றம்.

உழைக்கும் மக்கள் விடுதலை கழகம் அரசியல் எழுச்சி மாநாட்டில் 7- தீர்மானங்கள் நிறைவேற்றம்.
உழைக்கும் மக்கள் விடுதலை கழகம் அரசியல் எழுச்சி மாநாட்டில் 7- தீர்மானங்கள் நிறைவேற்றம். கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட தாந்தோனி மலை பொன்னகர் பகுதியில் தனியார் கூட்டரங்கில் உழைக்கும் மக்கள் விடுதலை கழகம் நடத்திய அரசியல் எழுச்சி மாநாடு நிறுவனத் தலைவர் தேக்கமலை தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர்கள் வெங்கடேசன், தொழிற்சங்க பிரிவு மாநில செயலாளர் முருகன், மாநில செயலாளர் பாலமுருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்ட இந்த மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக ஒடுக்கப்பட்ட மக்களின் ஒருங்கிணைப்பாளரான மக்கள் சேவகர் வாழவந்தியார் கலந்துகொண்டு சிறப்பித்தார். இந்த மாநாட்டில் போயர் சமுதாய மக்களின் உரிமைகளை மீட்டெடுக்க பல்வேறு கருத்துக்கள் முன் வைக்கப்பட்டது. மாநாட்டின் நிறைவில், தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும். போயர் நல வாரியம் அமைக்க வேண்டும். கட்டுமான தொழிலாளர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்க வேண்டும். கரூர் மாவட்டம் புன்னம் சத்திரத்தில் செயல்படும் நடுநிலைப்பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்திட வேண்டும் உள்ளிட்ட 7- தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
Next Story