கோவை: சயானிடம் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் 7 மணி நேரம் விசாரணை !

X
நீலகிரி மாவட்டம் கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017-ம் ஆண்டு நடந்த கொலை மற்றும் கொள்ளை சம்பவம் தொடர்பாக கேரளாவைச் சேர்ந்த சயான், மனோஜ் சாமி, சம்ஷீர் அலி, மனோஜ், ஜித்தின் ஜாய் உள்பட 10 பேரை போலீசார் கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு ஊட்டி கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இதற்கிடையே இந்த சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணை நடத்த தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்பேரில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் கோவையில் முகாம்மிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு தொடர்பாக சயானிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் நேற்று 7 மணி நேரம் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையின்போது பல்வேறு முக்கிய தகவல்கள் பெறப்பட்டதாக கூறப்படுகிறது. தொடர்ந்து இந்த வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலீசாரின் விசாரணை நடைபெற்று வருகிறது.
Next Story

