மறைந்த காடுவெட்டி குருவின் 7-ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு.

மறைந்த காடுவெட்டி குருவின் 7-ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு.
X
ஆண்டிமடத்தில் மறைந்த வன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி ஜெ.குருவின் ஏழாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு பாமக மற்றும் வன்னியர் சங்கத்தின் சார்பில் ஜெ குருவின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்
அரியலூர், மே.25- மறைந்த ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினரும் மாநில வன்னியர் சங்க தலைவருமான காடுவெட்டி ஜெ. குருவின் ஏழாம் ஆண்டு நினைவு தினம் இன்று பாமக மற்றும் வன்னியர் சங்கத்தினரால் அனுசரிக்கப்பட்டு வருகிறது இதனை ஒட்டி பாமக மற்றும் வன்னியர் சங்கத்தின் சார்பில் ஆங்காங்கே ஜெ.குருவின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர் இதன் ஒரு பகுதியாக அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் பேருந்து நிலையம் முன்பு வைக்கப்பட்டிருந்த காடுவெட்டி குருவின் திருவுருவப்படத்திற்கு மாநில வன்னியர் சங்க செயலாளர் வைத்தி தலைமையிலான வன்னியர் சங்கத்தினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் மேலும் மலர் தூவி வீரவணக்கம் செலுத்தினர்.இதில் வன்னியர் சங்கத்தினர் பாமக.வினர் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர் இதேபோல் பாமக மாநில செயலாளர் தமிழ் மறவன் தலைமையில் ஆங்காங்கே காடுவெட்டி குருவின் நினைவு நாள் அனுசரிக்கப்படுகிறது பல்வேறு பகுதிகளில் ஏழை எளிய மக்களுக்கு பாமக மற்றும் வன்னியர் சங்கத்தின் சார்பில் அன்னதானமும் வழங்கப்பட்டு வருகிறது
Next Story