வன்னியர் சங்க முன்னாள் மாநில தலைவர் ஜெ.குருவின் 7ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு.

வன்னியர் சங்க முன்னாள் மாநில தலைவர் ஜெ.குருவின் 7ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு.
X
ஆரணி பழைய பஸ்நிலையம், எம்ஜிஆர் சிலை அருகில் வன்னியர் சங்க முன்னாள் மாநில தலைவர் காடுவெட்டி ஜெ.குருவின் 7ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழை நடைபெற்றது
ஆரணி பழைய பஸ்நிலையம், எம்ஜிஆர் சிலை அருகில் வன்னியர் சங்க முன்னாள் மாநில தலைவர் காடுவெட்டி ஜெ.குருவின் 7ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. வன்னியர் சங்கத்தின் மாநில தலைவர் காடுவெட்டி ஜெ.குருவின் 7ம் ஆண்டு நினைவு தினம் முன்னிட்டு ஆரணி பழைய பஸ்நிலையம், எம்ஜிஆர் சிலை அருகில் வன்னியர் சங்கம் சார்பில் அவரது உருவ படம் வைத்து மலரஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும் மெழுகுவர்த்தி ஏற்றி அனுசரிப்பு செய்தனர். இதில் வன்னியர் சங்க மாவட்டசெயலாளர் அ.கருணாகரன் தலைமை தாங்கினார். பாமக மாவட்டதுணைசெயலாளர்கள் மு.மெய்யழகன், கு.சிவா, மாவட்ட அமைப்புச்செயலாளர் அ.க.ரஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வன்னியர் சங்க நகரசெயலாளர் ராஜாமணி அனைவரையும் வரவேற்றார். பாமக நகர செயலாளர்கள் ந.சதீஷ்குமார், சு.ரவிச்சந்திரன், ஒன்றியசெயலாளர்கள் கமல், பெருமாள், அஜீத், தினேஷ், அண்ணாமலை, அகிலன்பாபு. சுரேஷ், ஒன்றிய தலைவர் ரவிவர்மன், வன்னியர் சங்க நிர்வாகிகள் காடுகிருஷ்ணன், அய்யம்பாளையம் ராஜேந்திரன், கொக்கி குமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
Next Story