திமுக பிரமுகர் கொலை வழக்கில் 7 பேருக்கு ஆயுள் தண்டனை

X
திண்டுக்கல் வேடப்பட்டியை சேர்ந்தவர் மாயாண்டி ஜோசப் வயது 60.இவர் திமுக பிரமுகர் ஆவார். இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். இவரது மனைவி நிர்மலா. இவர் அடியனூத்து ஊராட்சியின் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஆவார். இவர்களுக்கு இரண்டு மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். இந்நிலையில் மாயாண்டி ஜோசப் கடந்த 23 5 2024 அன்று இரவு தனது மோட்டார் சைக்கிளில் யாகப்பன்பட்டியிலிருந்து வேடப்பட்டியில் உள்ள தனது வீட்டிற்கு செல்வதற்காக சென்று கொண்டிருந்தார். அப்பொழுது அவரை பின் தொடர்ந்து வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் மாயாண்டி ஜோசப் இருசக்கர வாகனத்தின் மீது மோதி கீழ விழ வைத்து. அரிவாள் போன்ற பயங்கரமான ஆயுதங்களால் வெட்டினர். இதில்சம்பவ இடத்திலேயே மாயாண்டி ஜோசப் இரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக திண்டுக்கல் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். படுகொலை சம்பவம் தொடர்பாக யாகப்பன்பட்டியை சேர்ந்த சேசுராஜ் வயது 39, கென்னடி வயது 37, டேனியல் ராஜா வயது 20, ஸ்டாலின் வயது 20, அலெக்ஸ் பிரிட்டோ வயது 20, இந்திரா காலனி பகுதியைச் சேர்ந்த காளீஸ்வரன் வயது 19, பிரவீன் குமார் வயது 19 மற்றும் 2 சிறுவர்களையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். இது தொடர்பான வழக்கு திண்டுக்கல் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அரசு தரப்பில் வழக்கறிஞர் மகேந்திரன் ஆஜராகி வாதாடினார். வழக்கு தொடர்பாக சாட்சிகள் மற்றும் இரு தரப்பு வாதங்கள் முடிவடைந்த நிலையில் தீர்ப்புக்காக ஒத்தி வைக்கப்பட்டது. இந் நிலையில் இந்த வழக்கு 03.06.25 விசாரணைக்கு வந்தது. இதனையடுத்து குற்றவாளிகள் ஏழு பேரும் நீதிமன்றத்தில் ஆஜர் ஆகினர். நீதிபதி முத்து சாரதா பரபரப்பு தீர்ப்பு வழங்கினார். அதில் சேசுராஜ் மற்றும் கென்னடி ஆகிய இருவருக்கு ஆயுள் தண்டனை மற்றும் தலா ரூபாய் 20,000 அபராதமும் டேனியல் ராஜா மற்றும் ஸ்டாலின் ஆகிய இருவருக்கும் ஆயுள் தண்டனையும் தலா ரூபாய் 50,000 அபராதமும் அலெக்ஸ் பிரிட்டோ, காளீஸ்வரன், மற்றும் பிரவீன் குமார் ஆகிய மூவருக்கும் ஆயுள் தண்டனையும் ரூபாய் 30,000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். இதனையடுத்து குற்றவாளிகள் ஏழு பேரும் மதுரை சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
Next Story

