தடா கோவில் - வேகமாக சென்ற பயணிகள் வேன் கவிழ்ந்து விபத்து. 7- பேர் படுகாயம்.

தடா கோவில் - வேகமாக சென்ற பயணிகள் வேன் கவிழ்ந்து விபத்து. 7- பேர் படுகாயம்.
தடா கோவில் - வேகமாக சென்ற பயணிகள் வேன் கவிழ்ந்து விபத்து. 7- பேர் படுகாயம். கரூர் மாவட்டம் , அரவக்குறிச்சி தாலுகா,சேவியர் தெருவை சேர்ந்தவர் சேவியர் வயது 31. இவர் ஜூன் 8-ம் தேதி மாலை 5:30 மணி அளவில் , இவரது வேனில் அரவக்குறிச்சி , கதர் மங்கலம் அருகே உள்ள எல்லமேடு பகுதியைச் சேர்ந்த சண்முகம் மனைவி சுமதி வயது 45, சிவநாதன் மனைவி கண்ணகி வயது 57,அதே பகுதியைச் சேர்ந்த பூங்கொடி , ஈஸ்வரி ,அங்கம்மாள் , மாரியம்மாள் , செல்வராணி ஆகியோரை ஏற்றிக்கொண்டு திண்டுக்கல் - கரூர் சாலையில் அந்த வேன் சென்றது. இந்த வேன் தடா கோவில் பகுதியில் சென்றபோது, வேனை வேகமாக இயக்கியதால், எதிர்பாராத விதமாக வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் வேனில் பயணித்த டிரைவர் தவிர அனைவருக்கும் காயம் ஏற்பட்டது. அனைவரையும் மீட்டு அரவக்குறிச்சி அரசு மருத்துவமனை மற்றும் அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். சம்பவம் தொடர்பாக வேனில் பயணித்த சுமதி அளித்த புகாரின் பேரில் , சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் , வேனை வேகமாகவும் , அஜாக்கிரதையாகவும் ஓட்டி விபத்து ஏற்படுத்திய சேவியர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் அரவக்குறிச்சி காவல் துறையினர்.
Next Story