தீக்குளித்த பெண்- பணம் கேட்டு நெருக்கடி கொடுத்த 7 பேர் கைது

தீக்குளித்த பெண்- பணம் கேட்டு நெருக்கடி கொடுத்த 7 பேர் கைது
X
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தீக்குளித்த பெண்- பணம் கேட்டு நெருக்கடி கொடுத்த 7 பேர் கைது
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நேற்று முன்தினம் நத்தம் அருகே சிரங்காட்டுப்பட்டி ஊராட்சி மங்களப்பட்டியை சேர்ந்த மலைச்சாமி மனைவி பச்சையம்மாள் (48) தீ குளித்தார் அங்கு பாதுகாப்புக்காக நின்றிருந்த போலீசார் அவர் மீது தண்ணீரை ஊற்றி அணைத்து திண்டுக்கல் மருத்துவக்கல்லூரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 70 சதவீத தீக்காயங்களுடன் உயிருக்கு போராடிய அவர் பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதனைத்தொடர்ந்து தற்கொலைக்கு தூண்டிய நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கணவர் மலைச்சாமி நத்தம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். நத்தம் போலீசார் வழக்கு பதிவு செய்த நத்தம் காவல் துறையினர் நத்தம் அருகே மங்களப்பட்டியை சேர்ந்த ஆண்டிச்சாமி (55). கருத்தலக்கம்பட்டியை சேர்ந்த துரைராஜ் (63), சிரங்காட்டுபட்டியை சேர்ந்த முத்துச்சாமி (50). சின்னையம்பட்டியைச் சேர்ந்த செல்லம் (58), உலுப்பகுடியை சேர்ந்த கண்ணன்(47), வீரப்பன் (52) மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அய்யூரை சேர்ந்த தயாளன் (45) ஆகிய 7 பேரை கைது செய்து நத்தம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
Next Story