தமிழகத்தில் உள்ள 7 என்.டி.சி. மில்கள் மீண்டும் செயல்பட வேண்டும் – தொழிற்சங்கங்கள் கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் அறிவிப்பு

X
தமிழகத்தில் செயலிழந்துள்ள ஏழு தேசிய ஜவுளி கழகம் (என்.டி.சி.) மில்கள் மீண்டும் திறக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி, தொழிற்சங்கங்கள் விநியோகம் மற்றும் ஜவுளி துறை அமைச்சருக்கு எதிராக கருப்பு கொடி போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்தன. இந்த போராட்ட அறிவிப்பைத் தொடர்ந்து, தொழிற்சங்கத்தினருடன் காவல்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர், தொழிற்சங்கத் தலைவர், தமிழகத்தில் உள்ள 7 என்.டி.சி. மில்களையும் உடனடியாக திறக்க வேண்டும். கடந்த 7 மாதமாக ஊதியம் இல்லாமல் வேலை இல்லாமல் தவிக்கிறோம். இந்த கோரிக்கைகளை மத்திய ஜவுளி இணை அமைச்சர் பபித்ரா மார்கரிட்டாவிடம் வலியுறுத்தியபோது, அவர் உடனடியாக டெல்லி சென்று நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார் என தெரிவித்தார்.
Next Story

