ரூபாய் 7 லட்சம் அபராதம் வசூலிப்பு

ரூபாய் 7 லட்சம் அபராதம் வசூலிப்பு
X
ஈரோடு தெற்கு போக்குவரத்து சார்பாக வாகனம் விதிமுறை மீறிய 1,736 மீது வழக்கு பதிவு ரூ.7 லட்சம் அபராதம் வசூலிப்பு
ஈரோடு மாநகர பகுதியில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. வாகன ஓட்டிகள் வாகன விதிமுறைகளை மதிக்காமல் செல்வதால் இது போன்ற விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது. இதனை தடுக்கும் பொருட்டு ஈரோடு தெற்கு போக்குவரத்து போலீசார், ஈரோடு வடக்கு போக்குவரத்து போலீசார் ஒருங்கிணைந்து வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி ஈரோடு தெற்கு போக்குவரத்து போலீஸ் சார்பாக கடந்த ஜூன் மாதம் முழுவதும் போக்குவரத்து வீதிகளை மீறியவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி குடிபோதையில் வாகனம் இயக்கியதாக 149 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஹெல்மெட் இன்றி டூவீலரில் சென்ற தொடர்பாக 768 வழக்குகளும், சீட் பெல்ட் அணியாமல் சென்றதை தொடர்பாக 29 வழக்குகளும், மொபைல் போன் பேசப்படி வாகனம் இயக்கியதாக 52 வழக்குகளும், விபத்தை ஏற்படுத்தும் விதமாக சென்றது தொடர்பாக 58 வழக்குகளும், டூவீலரில் மூன்று பேர் சென்ற தொடர்பாக 54 வழக்குகள் உட்பட 1736 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதன் மூலம் ரூ.7 லட்சத்து 34 ஆயிரம் அவரதமாக வசூலிக்கப்பட்டது. போதையில் வாகனம் இயக்கிய 85 பேரின் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்ய வட்டார போக்குவரத்து துறை அலுவலர்களுக்கு பரிந்துரை செய்துள்ளனர்.
Next Story