பாலத்தில் கார்கள் மோதி விபத்து: 7 பேர் படுகாயம்

X

நத்தத்தில் பாலத்தில் கார்கள் மோதி விபத்து: 7 பேர் படுகாயம்
காரைக்குடியை சேர்ந்தவர் ஸ்டாலின் (29). இவர் தனது நண்பர்கள் 7 பேருடன் நேற்று காரில் கொடைக்கானல் சென்று கொண்டிருந்தார். நத்தம் அருகே அப்பாஸ்புரம் பகுதியில் வந்தபோது எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்த கார்கள் சாலையோரத்தில் இருந்த பாலத்தில் அடுத்தடுத்து மோதி நின்றது. இதில் காரில் வந்த 7 பேரும் காயமடைந்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளனர். இது குறித்து நத்தம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story