ஆபாச நடனம் 7 வாலிபர்கள் மீது வழக்கு

X
குமரி மாவட்டம் குழித்துறையில் தற்போது பிரசித்தி பெற்ற வாவு பலி பொருட்காட்சி தொடங்கி தொடர்ந்து 20 நாட்கள் நடக்கிறது. இந்த பொருட்காட்சியில் குமரி, கேரளா மாநிலத்தை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்பது வழக்கம். இந்த நிலையில் சம்பவ தினம் பொருட்காட்சியில் நைட்டி அணிந்து ஆபாசமான முறையில் பொதுமக்களுக்கு இடையூறாக ஒரு கும்பல் இளைஞர்கள் ஆட்டம் போட்டனர். இந்த ஆட்டம் பல பெண்களை முகம் சுழிக்க வைத்தது. இந்த நிகழ்வுக்கு பலரும் சமூக வலைத்தளங்களில் கண்டனம் தெரிவித்தனர். போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து பொருட்காட்சி திடலில் நடனமாடிய மார்ஷல், ஷாஜி உட்பட ஏழு பேர் ஆபாச மீதும் களியக்காவிளை சப் - இன்ஸ்பெக்டர் பெனடிக்ட் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story

