கோவை சிறுமி கூட்டு பாலியல் வழக்கில் 7 பேருக்கு கடும் தண்டனை

கோவை சிறுமி கூட்டு பாலியல் வழக்கில் 7 பேருக்கு கடும் தண்டனை
X
பிறந்த நாள் கொண்டாட சென்ற சிறுமி 7 பேர் கொண்ட கும்பலால் கடத்தப்பட்டு, மாந்தோப்பில் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.
கோவை சீரநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி, 2019-ம் ஆண்டு தனது காதலனுடன் பிறந்த நாள் கொண்டாட சென்றபோது, 7 பேர் கொண்ட கும்பலால் கடத்தப்பட்டு, மாந்தோப்பில் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இந்தக் கொடூர சம்பவம் குறித்து ஆர்.எஸ்.புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் விசாரணையில் தொடர்புடைய 7 பேரையும் கைது செய்தனர். இந்த வழக்கு கோவை போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்றது. பரிந்துரைகள் மற்றும் வீடியோ ஆதாரங்கள் அடிப்படையில் நீதிபதி பகவதி அம்மாள் தீர்ப்பு வழங்கினார். தீய செயல்களில் ஈடுபட்ட 3 பேருக்கு சாகும்வரை ஆயுள் தண்டனை, மற்ற 4 பேருக்கு ஆயுள் தண்டனை, மேலும் அனைவருக்கும் தலா ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. 7 பேரும் கோவை சிறையில் அடைக்கப்பட்டனர்.
Next Story