போச்சம்பள்ளி அருகே மத்தூா் சுங்க சாவடியில் தகராறு -7 பேருக்கு காப்பு.

போச்சம்பள்ளி அருகே மத்தூா் சுங்க சாவடியில் தகராறு -7 பேருக்கு காப்பு.
X
போச்சம்பள்ளி அருகே மத்தூா் சுங்க சாவடியில் தகராறு -7 பேருக்கு காப்பு.
போச்சம்பள்ளி அருகே மத்தூா் சுங்க சாவடியில் தகராறு -7 பேருக்கு காப்பு. கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அருகே உள்ள ஓலப்பட்டி பகுதியை சோ்ந்தவா் பூவரசன் (27) இவர் தனியார் நிறுவன ஊழியர். இந்த நிலையில் இவரும் தனது நண்பா்களுடன் கிருஷ்ணகிரியில் இருந்து மத்தூா் நோக்கி காரில் நேற்று முன்தினம் வந்தனர். அப்போது நாகம்பட்டி சுங்க சாவடி மையத்தை கடந்து சென்றனர். அப்போது சுங்க சாவடி ஊளியர்களுக்கும் பணியாளா்களுக்கும், தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் இரண்டு தரப்பினரும் தாக்கிக் கொண்டனா். இதுகுறித்து மத்தூர் காவல் நிலையத்தில் பூவரசன் புகார் அளித்தார் அந்த புகாரின் பேரில் சுங்க சாவடி பணியாளா்களான ரவிக்குமார் (19) விஜய் (19) தேவிக் (19) ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்தனர். அதேபோல் சுங்க சாவடி பணியாளா் ரவிக்குமார் கொடுத்த புகாரின் பேரில் சாலமரத்துப்பட்டியைச் சோ்ந்த பூவரசன் (27) அசோக்குமார் (37) வெங்கடேசன் (36) ஜெகன் (34) ஆகிய நான்கு போ் மீதும் வழக்குப் பதிவு செய்து 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
Next Story