ஆடிப்பூரத்திருவிழாவின் 7ம் நாள் நிகழ்வான சயன சேவை நிகழ்ச்சி நடைபெற்றது,...இதனை முன்னிட்டு ஸ்ரீ ஆண்டாள் மடியில், ஸ்ரீ ரெங்கமன்னார் சயனித்திருக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.*

X
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ஆடிப்பூரத்திருவிழாவின் 7ம் நாள் நிகழ்வான சயன சேவை நிகழ்ச்சி நடைபெற்றது,...இதனை முன்னிட்டு ஸ்ரீ ஆண்டாள் மடியில், ஸ்ரீ ரெங்கமன்னார் சயனித்திருக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் பிரசித்தி பெற்ற ஸ்ரீஆண்டாள் கோவிலில் ஸ்ரீ ஆண்டாள் திருக்கோவிலில் ஆடிப்பூர விழாவின் முக்கிய நிகழ்வான சயன சேவை நிகழ்ச்சி நடைபெற்றது கோதை பிறந்த ஊர் கோவிந்தன் வாழும் ஊர் என்று பெயர் பெற்றது ஸ்ரீவில்லிபுத்தூர், கோதையாகிய ஸ்ரீஆண்டாள் பிறந்த ஊராகிய இந்த ஸ்ரீவில்லிபுத்தூரில் திருவடி பூர விழா கடந்த மாதம் 20 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது தொடர்ந்து 24 தேதி 5 கருட சேவை நடைபெற்றது. ஆடிப்பூர திருவிழா உற்சவத்தில் ஸ்ரீ ஆண்டாள் அவதரித்த நட்சத்திரமான ஆடிப் பூரம் அன்று நடைபெறும் தேர்த்திருவிழா மிக முக்கியமான நிகழ்ச்சியாகும் அதற்க்கு அடுத்து முக்கியத்துவம் வாய்த்த நிகழ்ச்சியாக கருதப்படுவது கிருஷ்ணன் கோவிலில் உள்ள முன் மண்டபத்தில் சயன சேவை நிகழ்ச்சியாகும். 10 நாட்கள் நடைபெறும் இந்த ஆடிப்பூர விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான ஸ்ரீஆண்டாள் மடியில், ஸ்ரீ ரெங்கமன்னார் சயனித்திருக்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. வழக்கமாக எல்லா ஊர்களிலும் ஸ்ரீ ரங்கநாதரின் காலடியில் தான் ஸ்ரீ லட்சுமி தேவி இருப்பார். ஆனால் இங்கு மட்டும் தான் ஸ்ரீ லஷ்மி தேவியின் அம்சமான ஸ்ரீ ஆண்டாளின் மடியில் தலை வைத்து ஸ்ரீ ரங்கநாதர் படுத்திருக்கும் சயன திருக்கோலம் மிக விசேஷமானதாகும். இக்காட்சியைக் காண நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் தரிசனம் செய்தனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வரும் 28 ஆம் தேதி நடைபெறுகிறது.
Next Story

