ராசிபுரம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆசிரியர்கள் 7 அம்ச கோரிக்கைகளை முன்னிறுத்தி கருப்புபட்டை அணிந்து வாயில் முழக்க போராட்டம்...

ராசிபுரம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆசிரியர்கள் 7 அம்ச  கோரிக்கைகளை முன்னிறுத்தி கருப்புபட்டை அணிந்து வாயில் முழக்க போராட்டம்...
X
ராசிபுரம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆசிரியர்கள் 7 அம்ச கோரிக்கைகளை முன்னிறுத்தி கருப்புபட்டை அணிந்து வாயில் முழக்க போராட்டம்...
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த ஆண்டகளூர்கேட் பகுதியில் திருவள்ளுவர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆனது செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரியில் உள்ள ஆசிரியர்கள் மற்றும் பேராசிரியர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டமானது கல்லூரி வாயில் முன்பு நடைபெற்ற நிலையில் புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்திடவும், அரசாணை வெளியிட்டு 4 ஆண்டுகள் கடந்தும் வழங்கப்படாத பேராசிரியர் பணி மேம்பாட்டினை உடனடியாக வழங்க வேண்டும் எனவும், பணியில் மூத்த அரசு கல்லூரி ஆசிரியரை கல்லூரி கல்வி இயக்குனராக நியமித்திட வேண்டும், முனைவர் பட்டம் பெறாத அனைவருக்கும் இணை பேராசிரியர் பணி மேம்பட வழங்கிட கோரியும், அரசு கல்லூரியில் காலியாக உள்ள ஆசிரியர்கள் பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும் என உள்ளிட்ட 7அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டமானது சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்றது.. ஆர்ப்பாட்டத்தில் முனைவர் ஐயந்துரை தலைமையில் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில சேலம் மண்டல மற்றும் ராசிபுரம் கிளையின் பொறுப்பாளர்கள் உட்பட 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஈடுபட்டனர்.
Next Story