ராணிப்பேட்டையில் கொலை வழக்கில் 7 பேர் கைது!

X
அரக்கோணம் அம்மனூர் பகுதியை சேர்ந்தவர் அவினேஷ் (வயது 31). நிபத்தனை ஜாமீனில் வெளியேவந்த இவர் ரத்தினகிரி காவல் நிலையத்தில் கையெழுத்து போடுவதற்கைாக வந்துள்ளார். அப்போது காவல் நிலையம் அருகிலேயே சராமரியாக வெட்டி கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து ரத்தினகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் கொலை வழக்கில் தொடர்புடைய அரக்கோணம் தி.மு.க. ஒன்றியக்குழு உறுப்பினர் அம்மனூர் பகுதியை சேர்ந்த அஸ்வினியின் கணவர் சுதகார் (43), அதே பகுதியை சேர்ந்த ரீகன் (32), சுரேஷ் (45), ஆனந்த் (22), வினித் (28), ஜெயபிரகாஷ் (28), ராணிப்பேட்டை மக்கள் தேசம் கட்சி நகர செயலாளர் சஞ்சய் (25) ஆகிய 7 பேரை கைது செய்து ஆற் காடு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
Next Story

