தேர்தல் ஆணையத்தை கண்டித்து நெல்லையில் செப்​.7-ல் காங்கிரஸ் மாநாடு

தேர்தல் ஆணையத்தை கண்டித்து நெல்லையில் செப்​.7-ல் காங்கிரஸ் மாநாடு
X
தேர்தல் ஆணையத்தை கண்டித்து நெல்லையில் செப்​.7-ல் காங்கிரஸ் மாநாடு என்று காங்கிரஸ் கட்​சி​யின் மாநில தலை​வர் செல்​வப்​பெருந்​தகை தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளி​யிட்ட அறிக்கையில், தேர்​தல் ஆணை​யம் பாஜக​வுடன் ரகசிய உடன்​பாடு கொண்டு வாக்​காளர் பட்​டியலில் மிகப்​பெரிய மோசடி நடத்​தி​யிருப்​பதை ராகுல்​காந்தி பகிரங்​க​மாக ஆதாரத்துடன் அம்​பலப்​படுத்​தி​யிருக்​கிறார். நாட்​டின் பல மாநிலங்​களில் வாக்​காளர் பட்​டியலில் போலி​யான நபர்​கள் பெரு​மளவு சேர்க்​கப்​பட்​டிருக்​கிறார்​கள். தேர்​தல் ஆணை​யத்​தின் வாக்கு திருட்டு மோசடியை கண்​டித்து வரும் செப்​.7-ம் தேதி திருநெல்​வேலி​யில் எனது தலை​மை​யில் மாநில அளவி​லான மாநாடு நடை​பெற உள்ளது. இதில், அகில இந்​திய மற்றும் தமிழக காங்​கிரஸ் முன்​னணித் தலை​வர்​கள் உள்​ளிட்​டோர்​ பங்​கேற்க உள்​ளனர்​.
Next Story