ராசிபுரம் அருகேயுள்ள கட்டனாச்சம்பட்டியில் மோகன் என்பவரின் பட்டியில் மர்மவிலங்கு கடித்ததில் 7ஆடுகள் உயிரிழப்பு மேலும் கன்று குட்டியை கடித்ததுவிட்டு சென்றதால் பரபரப்பு..

X
Rasipuram King 24x7 |7 Sept 2025 9:51 PM ISTராசிபுரம் அருகேயுள்ள கட்டனாச்சம்பட்டியில் மோகன் என்பவரின் பட்டியில் மர்மவிலங்கு கடித்ததில் 7ஆடுகள் உயிரிழப்பு மேலும் கன்று குட்டியை கடித்ததுவிட்டு சென்றதால் பரபரப்பு..
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகேயுள்ள கட்டனாச்சம்பட்டியை சேர்ந்தவர் மோகன்( 56) இவரின் நிலத்தில் பட்டி அமைத்து ஆடு, மாடு களை வளத்துவருகிறார். இந்நிலையில் நேற்று இரவு 10மணிக்கு பட்டியிலிருந்து வீட்டுக்கு சென்றுள்ளார் . இந்நிலையில் இன்று அதிகாலையில் வந்து பார்த்தபோது அதிர்ச்சியடைந்தார் அவருடைய 7ஆடுகளும் பரிதாதமாக இறந்துகிடந்தது எந்த விலங்கு கடித்தது என தெரியாமல் அதிர்ச்சியில் இருந்தார். இதனை பார்த்த அவரின் உறவினர் மூதாட்டி ஒருவர் இறந்த ஆடுகளை பார்த்து கதறி அழுதார்.மேலும் ஆடுகள் மட்டுமல்லாது கன்று குட்டியையும் கடித்ததுள்ளது என்பதுகுறிப்பிடதக்கது . மேலும் ஆடுகளை மர்ம விலங்கு கடித்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக ராசிபுரம் வன சரக அலுவலகத்தில் தகவல் தெரிவித்துள்ளதாகவும் கூறினர். இந்த ஆடுகளை கடித்தது அப்பகுதியை சேர்ந்த தெருநாய்களா, அல்லது மர்ம விலங்கா என தொடர்ந்து அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது..
Next Story
