ஆட்டுச் சந்தையில் ரூ. 7 கோடிக்கு மேல் ஆடுகள் விற்பனை.

ஆட்டுச் சந்தையில் ரூ. 7 கோடிக்கு மேல் ஆடுகள் விற்பனை.
X
மதுரை திருமங்கலத்தில் நேற்று நடந்த ஆட்டுச் சந்தையில் ரூ. 7 கோடிக்கு மேலாக ஆடுகள் விற்பனை ஆகி உள்ளது
மதுரை திருமங்கலம் ஆட்டுச் சந்தை ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை நடைபெறும் நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நேற்று (அக்.17) நடந்த ஆட்டுச் சந்தையில்,செம்மறி ஆடுகள், வெள்ளாடுகள் என ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு ரூ 7 கோடிக்கு மேல் விற்பனை நடந்துள்ளது. ஆடுகளை வாங்குவதற்கும் விற்பதற்கும் நேற்று முன்தினம் இரவில் இருந்தே பொதுமக்கள் சந்தை மற்றும் சந்தைக்கு அருகில் உள்ள பகுதிகளில் கூடியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story