கோட்டைமேடு காளியம்மன் கோவிலில் 7 பூசாரிகள் வசம் தொடர்பு வேண்டாம் என போர்டு

X
Komarapalayam King 24x7 |11 Nov 2025 6:10 PM ISTகுமாரபாளையம் அருகே கோட்டைமேடு பத்ரகாளியம்மன் கோவிலில் பூசாரிகள் பணத்தை உண்டியலில் திருடியதால், பூசாரிகள் பெயர்களை குறிப்பிட்டு யாரும் இவர்களுடன் தொடர்பு வைத்து கொள்ள வேண்டாம் என இந்து சமய அறநிலையத்துறை சார்பில் போர்டு வைக்கபட்டுள்ளது
குமாரபாளையம் கோட்டைமேடு பைபாஸ் சாலை அருகே இந்து அறநிலை துறைக்கு சொந்தமான பத்ரகாளி அம்மன் கோவில் அமைந்துள்ளது.. அதில் பரம்பரை பூசாரிகள் பூஜைகள் செய்து வருகின்றனர் .மேலும் இவர்கள் குடும்பத்துடன் கோவில் வளாகத்தில் தங்கி உள்ளனர். இவர்கள் கோவில் உண்டியலில் பணம் திருடி வருகின்றனர் என புகார் எழுந்தது. மேலும் கோவில் வளாகத்தில் அரை நிர்வாண கோலத்தில் உள்ளாடையுடன் நடமாடி வருகின்றனர். கோவில் புனிதமான இடம் அரை நிர்வாணமாக உள்ளாடை நிற்பது ஆகம விதிகளுக்கு முரணானது . எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்து இது குறித்த சி.சி.டி.வி. காட்சிகள் வெளியானது. அதில் கோவில் பூசாரிகள் கோவில் உண்டியலுக்குள் கையை விட்டு காணிக்கைகளை திருடுவதும், அரை நிர்வாண கோலத்தில் உடை மாற்றுவது குறித்த காட்சிகள் அடங்கிய இந்த வீடியோ வெளியானது. இவர்கள் மீது துறை ரீதியான விசாரணை நடந்து வரும் நிலையில், இவர்களுடன் பக்தர்கள் எவ்வித தொடர்பு வைத்து கொள்ள வேண்டாம் என இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கோவில் முன்பு போர்டு வைக்கப்பட்டுள்ளது
Next Story
