ராசிபுரம் அருகே 7 மாத சினை பசுமாடு மீது கார் மோதி பசு மாடு உயிரிழப்பு.காரில் பயணம் செய்த தம்பதியினர் காயம் இன்றி உயிர்த்தப்பினர்...

X
Rasipuram King 24x7 |17 Dec 2025 9:08 PM ISTராசிபுரம் அருகே 7 மாத சினை பசுமாடு மீது கார் மோதி பசு மாடு உயிரிழப்பு.காரில் பயணம் செய்த தம்பதியினர் காயம் இன்றி உயிர்த்தப்பினர்...
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியை சேர்ந்தவர் ஆனந்த பெருமாள்(31) அவரது மனைவி நித்திய ஶ்ரீ(25) ஆகிய இருவரும் பெங்களூரில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் நிலையில் இருவரும் பெங்களூரில் இருந்து சொந்த ஊரான தென்காசியை நோக்கி சென்று கொண்டிருந்தனர். இந்த நிலையில் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த ஏ.கே.சமுத்திரம் பிரிவு அருகே காரானது சென்று கொண்டிருந்த நிலையில் திடீரென தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே 7 மாத சினை பசுமாடு குறுக்கே வந்ததால் ஓட்டுநர் ஆனந்த பெருமாள் கார் மாட்டின் மீது மோதி விபத்துக்குள்ளானது.இதில் அணைபாளையம் பகுதியை சேர்ந்த திவ்யா (29) என்பவரது மாடு தூக்கி வீசப்பட்டதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் காரில் பயணம் செய்த தம்பதியினர் ஏர்பேக் வெளிவந்ததால் இருவரும் சிறு காயங்கள் இன்றி உயிர்த்தபினர். தேசிய நெடுஞ்சாலையில் மாடு திடீரென குறுக்கே வந்ததால் காரின் முன்பக்க பகுதிகள் முழுமையாக சேதமடைந்த நிலையில் சம்பவம் தொடர்பாக ராசிபுரம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்...
Next Story
