திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவில் பெரிய தேருக்கு பிஆர்டி நிறுவனங்களின் சார்பில் 7 டன் எடையுள்ள ரூ10 லட்சம் மதிப்பிலான தேர் சக்கரத்திற்கு பொருத்தும் இரும்பு அச்சு வழங்கல்

அர்த்தநாரீஸ்வரர் கோவில் பெரிய தேருக்கு பிஆர்டி நிறுவனங்களின் சார்பில் 7 டன் எடையுள்ள ரூ10 லட்சம் மதிப்பிலான சக்கரத்திற்கு பொருத்தும் இரும்பு அச்சு வழங்கும் நிகழ்ச்சி.பிஆர்டி நிறுவனங்களின்தலைவர்தங்கராஜ் மேலாண்மைஇயக்குனர் பரந்தாமன் ஆகியோர்வழங்க கோவில் செயல்அலுவலர்ரமணிகாந்தன் பெற்றுக் கொண்டார்
தமிழகத்தின் நான்காவது பெரிய தேரான திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர்கோவில் பெரிய தேர் புதிதாக அமைக்க தமிழ்நாடு அரசு அனுமதி அளித்திருந்த நிலையில் உபயதாரர்கள் வழங்கிய 2 கோடியே 17 லட்சம் மதிப்பீட்டில் புதிய தேர் கட்டுமானப் பணி நடந்து வருகிறது. 100 சதவீத பணிகள் நிறைவடைந்து உள்ளது.தமிழகத்தின் நான்காவது பெரிய தேரான அர்த்தநாரீஸ்வரர் கோவில் பெரிய தேர் மற்றும் முருகன் தேர் புதிதாக அமைக்கும் பணி கடந்த 12.07. 2024 அன்று பூஜை செய்து தொடங்கி வைக்கப்பட்டது.ரூ 2 கோடியே 17 லட்சம் உபயதாரர்கள் நிதியுதவியுடன் நூறு டன் மரங்கள் 80 டன் இலுப்பை மரம் 10 டன்வேம்பு 10 டன் தேக்கு உள்ளிட்ட மரங்களைக் கொண்டு 22அடி உயரம் 22 அடி அகலம் கொண்ட இரும்பு அச்சுடன் கூடிய பெரிய தேர் அமைக்கப்பட்டு பணிகள் நிறைவடைந்து வரும் ஜனவரி 25ஆம் தேதி வெள்ளோட்டம் விடப்படும் என அறிவிக்கப் பட்டிருக்கிறது. திருவாரூர் ஆழித்தேர் ஸ்தபதி இளவரசன் தலைமையில் 20 பேர் கொண்ட குழுவினர் இந்த தேர் அமைக்கும் பணியை செய்து வருகின்றனர். பூதபார், பூதபார் பீடம், சிறிய உருதாரம், பெரிய உருதாரம் நடகாசனம், தேவாசனம், சிம்மாசனம் என 7 நிலைகளில் உருவாக்கப் பட்டு வரும்ஜனவரி 25ஆம் தேதி வெள்ளோட்டம் விடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் தேருக்கான இரும்பு அச்சை பிஆர்டி நிறுவனங்கள் தனது சொந்த செலவில் வழங்குவதாக கூறி திருச்சி பெல் நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட தலா மூன்றரை டன் என ஏழு டன் எடை கொண்ட ரூ 10 லட்சம் மதிப்பிலான இரண்டு இரும்பு அச்சுகள்இன்று முறைப்படி கோவிலில் ஒப்படைக்கப் பட்டது. நிகழ்ச்சியில் PRD நிறுவனங்களின் தலைவர் தங்கராஜ் மேலாண்மை இயக்குனர் பரந்தாமன்,ஆகியோர் கோவில் இணை ஆணையர் மற்றும் செயல் அலுவலர் ரமணி காந்தன்,அறங்காவலர் குழு தலைவர் தங்கமுத்துஆகியோரிடம் முறைப்படி ஒப்படைத்தனர் நிகழ்ச்சியில் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் பிரபாகரன் சித்ரா வண்ணக் கண்ணன், அர்த்தனாரி, பச்சியப்பன், வெள்ளியங்கிரி நிறுவனங்களின் தலைவர் வெள்ளியங்கிரி, செந்தில் மோட்டார் செந்தில்குமார் சின்ன மாரியம்மன் கோவில் ஊர் தலைவர் முத்து கணபதி, கொத்துக்காரர் அன்பரசன், தேர் வடிவமைப்பு ஸ்தபதி இளவரசன், ஊர் கவுண்டர் ராஜா, மாதொருபாகன், வழக்கறிஞர் சுரேஷ்பாபு, உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். முன்னதாக இரும்பு அச்சுகளுக்கு பூஜைகள் செய்து வழிபாடு செய்யப்பட்டது.
Next Story