ராசிபுரம் அருகே கார் பழுதுபார்க்கும் நிலையத்தில் தீ விபத்து .7 கார்கள்,2 இருசக்கர வாகனம் என பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசம்....

ராசிபுரம் அருகே கார் பழுதுபார்க்கும் நிலையத்தில் தீ விபத்து .7  கார்கள்,2 இருசக்கர வாகனம் என பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசம்....
X
ராசிபுரம் அருகே கார் பழுதுபார்க்கும் நிலையத்தில் தீ விபத்து .7 கார்கள்,2 இருசக்கர வாகனம் என பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசம்....
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த கதிரநல்லூர் பகுதியை சேர்ந்தவர் கோபால் இவர் கடந்த 3 வருடங்களாக ஆண்டகலூர்கேட் பகுதியில் விஷ்ணு கருட என்ற பெயரில் கார் பழுது பார்க்கும் நிலையம் நடத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்று இரவு வழக்கம் போல் பணியை முடித்துவிட்டு தனது வீட்டிற்கு சென்று உள்ளார். இன்று அதிகாலையில் சுமார் 5 மணி அளவில் இவரது கார் பழுது பார்க்கும் நிலையத்தில் இருந்து கரும் புகையுடன் தீ விபத்து நடைபெறுவதாக தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்துள்ளார். பின்னர் ராசிபுரம்,நாமக்கல் தீயணைப்புத்துறையினர் தகவல் தெரிவிக்கவே சம்பவ இடத்திற்கு 10க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இருந்த போதிலும் கார் நிலையத்தில் இருந்த 7 கார்கள் மற்றும் 3 இருசக்கர வாகனம் என பல லட்சம் மதிப்பிலான உபரிபொருட்களும் தீயில் எறிந்து நாசமானது. மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா, அல்லது வேறு ஏதாவது காரணங்களா என்பது குறித்தும்,தற்போது குடோனில் இருந்த சிசிடிவி காட்சி பதிவு பெட்டிகளும் தீயில் எறிந்து நாசமானதால் விபத்து தொடர்பாக தொடர்ந்து ராசிபுரம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்...
Next Story