சித்தாமூர் அருகே வெறி நாய் கடித்து 7 ஆடுகள் பலி 5 ஆடுகள் படுகாயம்

X
சித்தாமூர் அருகே வெறி நாய் கடித்து 7 ஆடுகள் பலி 5 ஆடுகள் படுகாயம் செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் அருகே உள்ள இந்தலுார் கிராமத்தை சேர்ந்தவர் தேன்மொழி (வயது 45) கடந்த 5 ஆண்டுகளாக செம்மறி ஆடு வளர்ப்பில் ஈடுபட்டு வருகிறார்.வழக்கம் போல ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து செல்ல வீட்டின் அருகே இருந்த பட்டியில் இருந்து ஆடுகளை வெளியேற்றினர். இதில் 12 ஆடுகள் பட்டியிலேயே கிடந்தன, அருகே சென்று பார்த்த போது வெறிநாய் கடித்து பட்டியில் இருந்த 7 ஆடுகள் பலியானது 5 ஆடுகள் படுகாயமடைந்தது தெரியவந்தது. இதுகுறித்து சம்பவ இடத்திற்கு வந்த வருவாய்த்துறையினர் மற்றும் கால்நடை மருத்துவர்கள் உயிரிழந்த ஆடுகளை பிரேத பரிசோதனை செய்தனர். மேலும் அப்பகுதியில் கடந்த 15ம் தேதி வீரன் என்பவருக்கு சொந்தமான பட்டியில் இருந்த 9 ஆடுகளை வெறிநாய்கடித்து உயிரிழந்தது என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
Next Story

