சேலத்தில் மாணவ மாணவிகள் 7 வினாடிகளில் 500 ஓடுகளை உடத்து

சேலத்தில் மாணவ மாணவிகள் 7 வினாடிகளில் 500 ஓடுகளை உடத்து
X
உலக சாதனை நோபல் பரிசு புத்தகத்தில் இடம் பிடித்தது
வேர்ல்டு சோட்டாகான் கராத்தே ஆர்கனைஷேசன் இந்தியா அமைப்பை சேர்ந்த கராத்தே மாணவ-மாணவிகள் கைகளால் ஓடுகளை உடைத்து சாதனை படைக்கும் நிகழ்ச்சி சூரமங்கலம் செயின்ட் ஜோசப் மெட்ரிக் பள்ளியில் நடந்தது. இதில் ேசலம் ஸ்ரீசாரதா மெட்ரிக் பள்ளி, செயின்ட் ஜோசப் மெட்ரிக் பள்ளி, நிவிஷா பவுண்டேஷன் கராத்தே மாணவ- மாணவிகள் 132 பேர் 7 வினாடிகளில் 500 ஓடுகளை கைகளினால் ஒரே நேரத்தில் உடைத்து உலக சாதனை படைத்தனர். இதில் 2-ம் வகுப்பு முதல் கல்லூரி வரையிலான மாணவிகள் கலந்து கொண்டனர். மாணவிகளின் இந்த சாதனை நிகழ்வை நோபல் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றது. அந்த அமைப்பின் இயக்குனர் ஹேமலதா உலக சாதனையாக பதிவு செய்தார். அதற்கான அங்கீகார சான்றிதழை அந்த அமைப்பு வழங்கியது. நிகழ்ச்சியில் முதன்மை விருந்தினராக சேலம் மாநகர தலைமையிடத்து துணை கமிஷனர் பி.கீதா கலந்து கொண்டு சாதனை மாணவ-மாணவிகளுக்கு சான்றிதழ், பதக்கம் வழங்கி பாராட்டி பேசினார். முதன்மை விருந்தினரை சேலம் ஸ்ரீசாரதா உடற்கல்வியியல் கல்லூரி முதல்வர் ஜே.வி.சசிரேகா, ஸ்ரீசாரதா பாலாமந்திர் ஆண்கள் மெட்ரிக் பள்ளி முதல்வர் ஏ.பாரதி ஆகியோர் அறிமுகம் செய்து வைத்தனர். சிறப்பு விருந்தினராக ஸ்ரீசாரதா மெட்ரிக்குலேசன் பெண்கள் பள்ளி முதல்வர் என்.செண்பகவள்ளி, செயின்ட் ஜோசப் மெட்ரிக் பள்ளி முதல்வர் எஸ்.ஆரோக்கிய ஷோபியா, நிவிஷா பவுண்டேஷன் தலைவர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Next Story