தமிழக வெற்றிக்கழகத் தலைவர் நடிகர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு 7 பெண்கள் உட்பட 51 நபர்கள் விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரிக்கு உடல் உறுப்பு தானம் செய்தனர்*

X
தமிழக வெற்றிக்கழகத் தலைவர் நடிகர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு 7 பெண்கள் உட்பட 51 நபர்கள் விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரிக்கு உடல் உறுப்பு தானம் செய்தனர் விருதுநகரில் நடிகரும் தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவருமான விஜயின் 51 வது பிறந்தநாள் விழா அக்கட்சியின் விருதுநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் செல்வம் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் 100 க்கும் மேற்பட்டோர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு ரத்ததானம் செய்தனர்.மேலும் 7 பெண்கள் உட்பட 51 நபர்கள் அரசு மருத்துவக்கல்லூரிக்கு உடல் உறுப்பு தானம் செய்தனர்.பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில் அதற்கான சான்றிதழ்களை கொடையாளர்களுக்கு சால்வை அணிவித்து கெளரவப்படுத்தி வழங்கப்பட்டன. பின்னர் பள்ளிக்குழந்தைகளுக்கு நோட்டு புத்தகம் உள்ளிட்ட நலத்திட்டங்கள் வழங்கப்பட்டன.
Next Story

