சின்ன வட்டானூர் பகுதியில் வீட்டில் நுழைந்து 7 பவுன் தங்க நகை மற்றும் 70 ஆயிரம் பணம் கொள்ளை மர்ம நபர்கள் கைவரிசை

சின்ன வட்டானூர் பகுதியில் வீட்டில் நுழைந்து 7 பவுன் தங்க நகை மற்றும் 70 ஆயிரம் பணம் கொள்ளை மர்ம நபர்கள் கைவரிசை
திருப்பத்தூர் மாவட்டம் சின்ன வட்டானூர் பகுதியில் வீட்டில் நுழைந்து 7 பவுன் தங்க நகை மற்றும் 70 ஆயிரம் பணம் கொள்ளை மர்ம நபர்கள் கைவரிசை திருப்பத்தூர் மாவட்டம் ஜவ்வாது மலை புதூர் நாடு அடுத்த சின்னவட்டானூர் பகுதியை சேர்ந்த லோகநாதன் மனைவி தெய்வானை (65) இவருக்கு இரண்டு பெண்கள் மற்றும் ஒரு ஆண் பிள்ளை உள்ளன. அனைவரும் திருமணம் ஆகி ‌ வெளியூரில் வசித்து வருகின்றனர். மேலும் கணவன் உயிரிழந்த நிலையில் தெய்வானை மட்டும் வசித்து வருகிறார். தெய்வானைக்கு நிலத்தில் ஒரு வீடும் ஊருக்குள் ஒரு வீடும் இருந்து வருவதாக தெரிகிறது இந்த நிலையில் நேற்று இரவு நிலத்திலிருந்து வீட்டில் யாரும் இல்லாததை அறிந்து மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பீரோவின் சாவியை எடுத்து திறந்து அதற்குள் இருந்த 70 ஆயிரம் பணத்தை எடுத்துள்ளனர் மேலும் மற்றொரு பீரோவின் பூட்டை உடைத்து அதிலிருந்து ஏழு சவரன் நகையை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். பின்னர் காலையில் வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார் இதுகுறித்து தெய்வானை கொடுத்த புகாரின் பேரில் திருப்பத்தூர் கிராமிய போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் மர்ம நபர்கள் எவரேனும் நகை பணத்தை கொள்ளை அடித்துச் சென்றனரா? அல்லது அக்கம் பக்கத்தினரே இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனரா? எனவும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story