நாய் வளர்த்ததால் சண்டை ஏற்பட்டு ஒரு பெண்ணை 7 பேர் சேர்ந்து தாக்கிய சிசிடிவி காட்சிகள் வெளியானதால் பரபரப்பு.,8 பேர் மீது வழக்கு பதிவு...*

X

நாய் வளர்த்ததால் சண்டை ஏற்பட்டு ஒரு பெண்ணை 7 பேர் சேர்ந்து தாக்கிய சிசிடிவி காட்சிகள் வெளியானதால் பரபரப்பு.,8 பேர் மீது வழக்கு பதிவு...*
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே நாய் வளர்த்ததால் சண்டை ஏற்பட்டு ஒரு பெண்ணை 7 பேர் சேர்ந்து தாக்கிய சிசிடிவி காட்சிகள் வெளியானதால் பரபரப்பு.,8 பேர் மீது வழக்கு பதிவு... விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வைத்தியலிங்கபுரம் பகுதியை சேர்ந்த செல்வலட்சுமி என்பவர் அவரது வீட்டில் நாய்கள் வளர்த்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அடிக்கடி நாய்கள் குறைப்பதாகவும் அவரது வீட்டின் எதிரே கண்ணாத்தாள் என்பவர் வசித்து வந்ததாகவும் அவருக்கு வளர்ப்பு நாயின் சத்தம் இடையுறாக இருப்பதாகவும் இதனால் கண்ணாத்தாள் செல்வலட்சுமிக்கு இடையே அடிக்கடி வாக்குவாதம் வருவதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் செல்வலட்சுமி வளர்த்த நாய் வெகு நேரமாக குறைத்ததாகவும் இதனால் கண்ணாத்தாள் வீட்டின் வெளியே நின்று திட்டியதாகவும் இதனால் ஆத்திரம் அடைத்த செல்வலட்சுமி மற்றும் அவரது உறவினர்களான தமிழரசி,கவிதா, வைரக்கனி,ஜான்சிராணி,லட்சுமி, கிட்னம்மாள் ஆகிய ஏழு பேர் ஒன்றாக சேர்ந்து கண்ணாத்தாளை சரமாரியாக தாக்கியுள்ளனர் இதில் பலத்த காயம் அடைந்த கண்ணாத்தாள் வன்னியம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் அடிப்படையில் சிசிடிவி காட்சிகளை வைத்து கண்ணாத்தாவை அடித்த ஏழு பேர் மீதும் மற்றும் கண்ணாத்தாள் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story