பட்ஜெட்டை கண்டித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 70 பேர் கைது.
Karur King 24x7 |1 Aug 2024 9:29 AM GMT
பட்ஜெட்டை கண்டித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 70 பேர் கைது.
பட்ஜெட்டை கண்டித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 70 பேர் கைது. மத்திய அரசு அண்மையில் அறிவித்த பட்ஜெட்டை கண்டித்து கரூர் ஜவஹர் பஜார், பேருந்து நிலைய ரவுண்டான பகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் இந்திய கம்யூனிஸ்ட் லெனிலிஸ்ட் கட்சி சார்பில், மறியல் போராட்டம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து பேருந்து நிலைய ரவுண்டானா அருகே கரூர்- திருச்சி சாலையில் சாலை மறியல் போராட்டத்தில், சுமார் 150 க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர்.இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்திலிருந்த கரூர் காவல்துறை கண்காணிப்பாளர் செல்வராஜ் தலைமையிலான காவலர்கள், போராட்டத்தில் ஈடுபட்ட 70-க்கும் மேற்பட்ட வரை கைது செய்து, காவல் வாகனத்தில் அழைத்துச் சென்று, தனியார் மண்டபத்தில் சிறை வைத்தனர்.
Next Story