நாமக்கல்லில், 70 கோடி மதிப்பீட்டில் புதிய புறவழிச் சாலை எம்.பி கே.ஆர்.என் ராஜேஷ்குமார் தகவல்.
Namakkal (Off) King 24x7 |25 Dec 2024 12:37 PM GMT
நாமக்கல் புதிய புறவழிச்சாலை ரூ. 70 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும் ரயில்வே பாலத்திற்கு தென்னக இரயில்வே தொழில்நுட்ப அனுமதி நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளரும், பாரளுமன்ற மாநிலங்களவை உறுப்பினரும், நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர். கே.ஆர். என். இராஜேஸ்குமார், தகவல்.
நாமக்கல் புதிய பைபாஸ் ரோட்டில் ரூ. 70 கோடி மதிப்பில் ரயில்வே மேம்பாலம் அமைப்பதற்காக, மத்திய ரயில்வே அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. வருகிற 2025-ஆம் ஆண்டு இறுதிக்குள் முதலைபட்டி முதல் திருச்சி ரோடு வரை 3 கட்ட பைபாஸ் பணிகள் நிறைவு பெறும் என நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளரும், பாரளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் தெரிவித்துள்ளார்.நாமக்கல் நகரில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, சேலம் ரோட்டில் உள்ள முதலைப்பட்டியில் இருந்து, சேந்தமங்கலம் ரோடு, துறையூர் ரோடு, திருச்சி ரோடு, மோகனூர் ரோடு வழியாக வள்ளிபுரம் அருகே சேலம்&கரூர் தேசிய நெடுஞ்சாலையை இணைக்கும் புறவழிச்சாலை எனும், புதிய பைபாஸ் ரோடு அமைக்கும் பணிக்கு மாண்புமிகு. தமிழ்நாடு முதலமைச்சர் அனுமதி அளித்துள்ளார்.இந்த பணிகள், 3 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே சேலம் ரோட்டில் முதலைப்பட்டியில் இருந்து புதிய பஸ் ஸ்டாண்டு வரை முதல் கட்டப்பணிகள் முடிவடைந்து, புதிய பஸ் ஸ்டாண்டு செயல்பாட்டிற்கு வந்துள்ளது.தற்போது புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து, சேந்தமங்கம் ரோட்டில் உள்ள வேட்டாம்பாடி வரை 2ம் கட்ட பணியும், சேந்தமங்கலம் ரோட்டில் இருந்த திருச்சி ரோட்டில் புதுப்பட்டி வரை 3-ம் கட்டப்பணியும் வேகமாக நடைபெற்று வருகிறது.2-ம் கட்டத்தில் மரூர்ப்பட்டி அருகில் ரயில் பாதை அமைந்துள்ளது. அந்த இடத்தில் ரயில்வே மேம்பாலம் அமைக்க அனுமதி அளிக்க வேண்டும் என மத்திய ரயில்வே வாரியத் தலைவரை டெல்லியில் சந்தித்து கோரிக்கை விடுத்தார்.தற்போது மத்திய ரயில்வே அமைச்சகம் அதற்கான தொழில்நுட்ப அனுமதி வழங்கியுள்ளது. சுமார் 1 கி.மீ தூரம் உள்ள ரயில்வே மேம்பாலப்பணிகள் ரூ. 70 கோடி மதிப்பீட்டில், மாநில நெடுஞ்சாலைத்துறை மூலம் விரைவில் மேற்கொள்ளப்படும். இந்த பணியும், 2. 3-ம் கட்ட பைபாஸ் ரோடு பணியும். அடுத்த 2025ம் ஆண்டிற்கு முடிவடைந்துவிடும். அதைத்தொடர்ந்து சேலத்தில் இருந்து திருச்சி, துறையூர் செல்லும் வாகனங்கள் நாமக்கல் நகருக்குள் செல்லாமல் புதிய பைபாஸ் ரோடு வழியாக செல்ல முடியும் என தெரிவித்துள்ளார்.
Next Story