கோவை: 70 லட்சம் மதிப்பிலான உயர் ரக போதை பொருட்கள் பறிமுதல் !

கோவை: 70 லட்சம் மதிப்பிலான உயர் ரக போதை பொருட்கள் பறிமுதல் !
X
மேட்டுப்பாளையம் ரோடு பூமார்க்கெட் அம்மா உணவகம் கேட் அருகில் போதை பொருட்கள் விற்பனை செய்த 7 பேர் கைது.
கோவை மாநகரில் போதைப் பொருட்களை தடுப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், ஆர்.எஸ் புரம் பகுதியில் தனிப்படை போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது, மேட்டுப்பாளையம் ரோடு பூமார்க்கெட் அம்மா உணவகம் கேட் அருகில் போதை பொருட்கள் விற்பனை செய்து வந்த மணிகண்டன், விநாயகம், கிருஷ்ணகாந்த், மகாவிஷ்ணு, ஆதர்ஸ் டால்ஸ்டாய் , ரிதேஷ் லம்பா மற்றும் ரோகன் ஷெட்டி ஆகிய 7 பேரை போலீசார் இன்று கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்து MDMA (ECSTASY), MDMA பவுடர், கொக்கைன், கிரீன் கஞ்சா, உலர்ந்த கஞ்சா, குஷ், ரூ. 25 லட்சம் ரொக்கம், பணம் எண்ணும் இயந்திரம், போதை பொருள் எடை பார்க்கும் இயந்திரம், Corona Extra பீர் பாட்டில்கள், Hoegaarden பீர் பாட்டில்கள், CYT MERLOT ஒயின் பாட்டில்கள், மூன்று கார்கள் மற்றும் 12 செல்போன்கள் உள்ளிட்ட 70 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. விசாரணையில், மணிகண்டன் கோயம்புத்தூர் ராமநாதபுரத்தை சேர்ந்த பிதேஷ் லம்பா மூலம் மகாராஷ்டிராவிலிருந்து ஜேக்கப் பிராங்கிளின் மூலமாக MDMA பில்ஸ் மற்றும் கொகைன் ஆகியவற்றை பெற்று விற்றதும், கிரிஷ் ரோகன் ஷெட்டி இமாச்சல் பிரதேசத்திலிருந்து கஞ்சா மற்றும் உயர்தர குஷ், கிரீன் கஞ்சா போன்ற பொருட்களை தனது நண்பர்கள் மூலம் விற்பனை செய்து வந்ததும் தெரியவந்துள்ளது.
Next Story