கோவை: கடத்தப்பட்ட 70 லட்சம் ரொக்கம், தங்கம் பறிமுதல் !
கோவை மற்றும் கேரளா மாநிலங்களுக்கு இடையே சட்டவிரோதமாக பணம் மற்றும் தங்கம் கடத்த முயன்ற மூன்று பேர் கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் வேலந்தவலத்தில் கைது செய்யப்பட்டனர். இவர்களிடமிருந்து ரூ.70 லட்சம் ரொக்கப் பணமும், 200 கிராம் தங்கமும் நேற்று பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மாவட்ட போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் நடத்திய வாகன சோதனையில், கோவையைச் சேர்ந்த சாகர், மணிகண்டன், சந்தீப் ஆகியோர் சிக்கினர். இவர்கள் மூவரும் பிரத்யேகமாகத் தயாரிக்கப்பட்ட உள்ளாடைகளுக்குள் பணம் மற்றும் தங்கத்தை மறைத்து கடத்த முயன்றதாக போலீசார் தெரிவித்தனர். சந்தேகத்தின் பேரில் நிறுத்தப்பட்ட வாகனத்தைச் சோதனையிட்டபோது, உள்ளாடைகளுக்குள் மறைக்கப்பட்டிருந்த பணம் மற்றும் தங்கம் கண்டுபிடிக்கப்பட்டது. கைது செய்யப்பட்ட நபர்கள் யார், யாருக்காக, எங்கிருந்து எங்கு கொண்டு செல்ல முயன்றார்கள் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Next Story



