கிணற்று மோட்டாரில் 70 மீட்டர் ஒயர் திருட்டு

கிணற்று மோட்டாரில்  70 மீட்டர் ஒயர் திருட்டு
X
குமாரபாளையம் அருகே கிணற்று மோட்டாரில் 70 மீட்டர் ஒயர் திருடப்பட்டது.
குமாரபாளையம் அருகே தட்டான்குட்டை ஊராட்சி, கல்லங்காட்டுவலசு, வீரப்பம்பாளையம், வேளாங்காடு பகுதியில் உள்ள விவசாய பொதுக்கிணற்றில், விவசாய நிலத்திற்கு நீர் பாய்ச்ச மோட்டார் அமைக்கப்பட்டு இருந்தது. நேற்றுமுன்தினம் இரவு மோட்டார் ரூமிலிருந்து, மோட்டார் வரை அமைக்கப்பட்ட மின் ஒயர் சுமார் 70 மீட்டர் மர்ம நபர்களால் திருடப்பட்டது. இதன் மதிப்பு சுமார் நான்காயிரம் என்று கூறப்படுகிறது. நேற்று காலை மணிவேல் என்பவர் நேற்று காலை 07:00 மணியளவில் வந்து பார்த்த போது, மின் ஒயர் திருடப்பட்டது தெரியவந்தது. இப்பகுதியில் விவசாய கிணறுகளை குறி வைத்து மின் ஓயர்கள் திருடும் நபர்களை பிடிக்க நடவடிக்கை எடுக்கக்கோரி, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து குமாரபாளையம் போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.
Next Story