திருச்செங்கோட்டில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அருகே ரோட்டில் நின்ற லாரி திடீரென தீப்பிடித்து எரிந்து 70 லட்ச ரூபாய் மதிப்புள்ளான பொருள்கள் எரிந்து நாசம்
Tiruchengode King 24x7 |30 Oct 2025 7:38 PM ISTதிருச்செங்கோடு சங்ககிரி ரோடு ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அருகே பிளைவுட் லோடுடன்நின்ற லாரியின் டயர் வெடித்து திடீரென தீப்பிடித்ததால் லாரி அருகில் இருந்த கடைகள் ரோட்டில் நின்ற இரு சக்கர வாகனங்கள் என இருபது லட்ச ரூபாய் மதிப்பிலான பொருள்கள் எரிந்து நாசமானதுசம்பவம் குறித்து நகர போலீசார் விசாரணை
திருச்செங்கோடு ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் எதிரில் திருச்செங்கோடு லாரி உரிமையாளர்கள் சங்கம் பெட்ரோல் பங்குக்கும் எதிரில் கேரளாவில் இருந்து வந்து நின்று கொண்டிருந்தஹைதராபாத் செல்லஇருந்த டிப்பர் லோடு ஏற்றி வந்த 12 சக்கரம் கொண்ட அசோக் லேலண்ட் டாரஸ் லாரியில் டயர் வெடித்து டீசல் டேங்கில் தீப்பிடித்து திடீர் விபத்து கொளுந்து விட்டு எறிந்த தீயில் லாரி முற்றிலும் எரிந்து சேதம் கொழுந்து விட்டு எரிந்த லாரி டயர்கள் வெடித்ததால் பயங்கர சத்தம்ரோட்டில் ஓரம் இருந்த கடைகள் லாரியின் அருகில் நிறுத்தப் பட்டிருந்த இருசக்கர வாகனங்கள் எரிந்து சேதம் பெட்ரோல் பங்க் அருகில் இருந்ததால் பரபரப்பு திருச்செங்கோட்டில் இருந்து இரண்டு தீயணைப்பு வாகனங்கள் வெப்படையில் இருந்து ஒரு தீயணைப்பு வாகனம் என மூன்று தீயணைப்பு வாகனங்கள் வந்து வேகமாக தீயை அணைத்தனர் சம்பவம் குறித்து திருச்செங்கோடு நகர போலீசார் விசாரணைஇந்த விபத்தில் லாரி மரம் அருகே இருந்த கடைகள் இருசக்கர வாகனங்கள் என சுமார் 50 லட்சத்திற்கும் மேற்பட்ட பொருள்கள் எரிந்து சேதமானது* கேரளாவில் இருந்து டிப்பர் லோடு ஏற்றிக்கொண்டு ஹைதராபாத் செல்ல திருச்செங்கோடுசெங்கோடம் பாளையத்தைச் சேர்ந்தசிதம்பரம் என்பவரதுமகன் மகேந்திரனுக்குசொந்தமான 12 டயர்கள் கொண்ட அசோக் லேலண்ட் டாரஸ் லாரியை பாலருகேட் பகுதியைச் சேர்ந்த நாகராஜ் 45 என்ற ஓட்டுநர் ஓட்டி வந்துள்ளார் லாரியில் சிதம்பரமும் உடன் பயணித்துள்ளார்.வரும் வழியில் திருச்செங்கோடுசங்ககிரி ரோட்டில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அருகில் உள்ள திருச்செங்கோடு லாரி உரிமையாளர்கள் சங்க பெட்ரோல் பங்கில் டீசல் அடிப்பதற்காக வண்டியை ஓரம் கட்டி நிறுத்திவிட்டு டிரைவர் கீழே இறங்கிய சமயத்தில் திடீரென நடுப்பக்க டயர்கள் வெடித்து டீசல் டேங்க் தாக்கப்பட்டு டீசல் டேங்கில் இருந்து திடீர் தீ எழுந்து குரூப்பு நிறுவன பரவ தொடங்கியது டயர்கள் வெடிக்க தொடங்கியவுடன் அருகில் இருந்த கடைகளின் சட்டங்களில் உயர் காற்றழுத்த மோதியதாலும் தீயின் புகைப்படத்தாலும் சேதம் ஏற்பட்டது லாரி நிறுத்தப்பட்டிருந்த இடத்திற்கு அருகே இருந்த சுமார் 6 இருசக்கர வாகனங்கள் முற்றிலும் எரிந்து சேதமானது லாரி எரிவது குறித்து தகவல் அறிந்த திருச்செங்கோடு தீயணைப்பு துறையினர் மாவட்ட தீயணைப்பு அலுவலர் ஆனந்த் மற்றும் தீயணைப்பு நிலைய அலுவலர் கரிகாலன் தலைமையில்இரண்டு தீயணைப்பு வாகனங்களில் விரைந்து வந்துதீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர் கூடுதலாக உதவிக்கு வெப்படியில் இருந்தும் தீயணைப்பு வாகனம் வரவழைக்கப் பட்டது. டீசல் பிடித்து எரிந்ததாலும் பிளைவுட்பலகைகள் மளமளவென தீப்பிடித்து எரிந்ததால் தீயணைப்பு வீரர்கள் சுமார் ஒன்றரை மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர் இந்த தீ விபத்தில்18 லட்சத்து 20 ஆயிரம் மதிப்புள்ள பிளைவுட் பலகைகள் மற்றும் 22 லட்ச ரூபாய் மதிப்புள்ள லாரி முற்றிலும் எரிந்து சேதமானது. மேலும் அருகில் உள்ள பழனிவேல் என்பவரது ஆட்டோ மொபைல்ஸ் ஸ்பேர் பார்ட்ஸ் கடையில் சுமார் 10 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் எரிந்து சேதம் லாரி அருகில் நிறுத்தப்பட்டு இருந்த நாலு ஸ்கூட்டி வாகனம் ஒரு டிவிஎஸ் 50 எக்ஸெல் வாகனம் என சுமார் 5 லட்ச ரூபாய் மதிப்புள்ள வாகனங்கள் என சுமார் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ளபொருட்கள் எரிந்து சேதமானது பலத்த சத்தத்துடன் பெயர்கள் பிடித்து டி கொழுந்துவிட்டு எரிந்ததால்எதிரில் பெட்ரோல் பங்க் இருந்ததாலும் நீதிமன்ற வளாகத்தின் அருகில் விபத்து நேரிட்டதாலும் பரபரப்பு ஏற்பட்டது.இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து திருச்செங்கோடு நகர காவல் நிலைய ஆய்வாளர் வளர்மதி தலைமையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் சம்பவ இடத்தை திருச்செங்கோடு உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் கிருஷ்ணன் நேரில் ஆய்வு செய்தார்.
Next Story






