ஏடிஎம் கார்டை திருடி ரூ.70ஆயிரம் எடுத்த வாலிபர் கைது.

X
Arani King 24x7 |18 Dec 2025 9:02 PM ISTஆரணி அடுத்த கைக்கிளைத்தாங்கல் கிராமத்தில் ஏடிஎம் கார்டை திருடி ரூ.70ஆயிரம் எடுத்துக்கொண்டு களம்பூர் ரயில்வே ஸ்டேஷனில் புறப்பட இருந்த செக்யூரிட்டியை களம்பூர் போலீஸார் கைது செய்தனர்.
ஆரணி அடுத்த கைக்கிளைத்தாங்கல் கிராமத்தில் ஏடிஎம் கார்டை திருடி ரூ.70ஆயிரம் எடுத்துக்கொண்டு களம்பூர் ரயில்வே ஸ்டேஷனில் புறப்பட இருந்த செக்யூரிட்டியை களம்பூர் போலீஸார் கைது செய்தனர். ஆரணி அடுத்த கைக்கிளைத்தாங்கல், அம்பேத்கார் நகர் சேர்ந்த முருகேசன் மனைவி அம்பிகா(50) என்பவர் வீட்டிலிருந்து அதிகாலையில் நிலத்திற்கு சென்றுள்ளார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி மகன் மயில்வாணன்(47) என்பவர் அம்பிகா வீட்டிற்கு சென்றுள்ளார். வீட்டில் யாரும் இல்லாததால் அங்கு இருந்த ஏடிஎம் கார்டை எடுத்துச்சென்று விட்டார். மேலும் அந்த ஏடிஎம் கார்டில் பின்பக்கம் பின் நம்பர் இருந்ததால் சுலபமாக ஏடிஎம் ஐ எடுத்துச்சென்று ரூ.70ஆயிரம் வரை பணம் எடுத்துள்ளார். அப்போது அம்பிகா செல்போனுக்கு பணம் எடுத்ததாக குறுஞ்செய்தி வந்துள்ளது. இதனால் களம்பூர் காவல் நிலையத்தில் அம்பிகா புகார் கொடுத்தார். களம்பூர் போலீஸார் உடனடியாக எந்த ஏடிஎம்மிலிருந்து குறுஞ்செய்தி வந்தது என கண்டுபிடித்து அந்த ஏடிஎம்மில் உள்ள சிசிடிவி கேமரா மூலம் நபரை அடையாளம் தெரிந்துகொண்டனர். மேலும் தொடர்ந்து அந்த தேடிவந்ததில் களம்பூர் ரயில்வே நிலையத்தில் ஏடிஎம்மில் பணம் எடுத்த நபர் ரயிலுக்காக காத்திருந்துள்ளார். அப்போது களம்பூர் போலீஸார் மயில்வாணனை கைது செயதனர்.
Next Story
