மாவட்ட அளவிலான அறிவியல் கண்டுபிடிப்பு கண்காட்சி 70 க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் 30க்கும் மேற்பட்ட தங்களது கண்டுபிடிப்புகளை காட்சிபடுத்தி வியக்க வைத்தனர் ..*
Virudhunagar King 24x7 |9 Jan 2025 2:00 PM GMT
மாவட்ட அளவிலான அறிவியல் கண்டுபிடிப்பு கண்காட்சி 70 க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் 30க்கும் மேற்பட்ட தங்களது கண்டுபிடிப்புகளை காட்சிபடுத்தி வியக்க வைத்தனர் ..*
விருதுநகரில் மாவட்ட அளவிலான அறிவியல் கண்டுபிடிப்பு கண்காட்சி 70 க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் 30க்கும் மேற்பட்ட தங்களது கண்டுபிடிப்புகளை காட்சிபடுத்தி வியக்க வைத்தனர் .. விருதுநகர் தனியார் மெட்ரிக் பள்ளியில் இன்று மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. இந்த கண்காட்சியில் அரசு அரசு ,அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளி மாணவ மாணவிகள் 70க்கும் மேற்பட்டவர் கலந்து கொண்டு 35க்கும் மேற்பட்ட அறிவியல் கண்டுபிடிப்புகளை காட்சிபடுத்தினர். . இந்த கண்காட்சியில் முக்கியமாக கீழடி அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிப்புகளை மாற்றுத்திறனாளிகளும் உணரும் வகையில் சென்சார் அளவிலான கருவி, மேலும் வயதானவர்கள் கீழே விழுந்து அடிபடும் பொழுது சென்சார் மூலமாக அவசர ஊர்திக்கு தகவல் கொடுக்கும் கருவி, மேலும் பேருந்து நிலையத்தில் பயனாளிகளின் கைப்பேசிகளுக்கு சார்ஜ் ஏற்றும் வகையில் 5 ரூபாய் நாணயத்தை போட்டவுடன் சார்ஜ் ஏத்தும் வசதி உள்ளிட்ட பல்வேறு கண்டுபிடிப்புகளை வியக்கும் விதமாக பொதுமக்களின் பார்வைக்காக காட்சிபடுத்தினர் இதில் சிறந்த கண்டுபிடிப்புகளுக்கு பரிகளும் வழங்கப்பட்டன
Next Story