திருமகோட்டையில் ரூ7000 மதிப்பிற்கான 6 கிலோ குட்கா பறிமுதல்

திருமகோட்டையில் ரூ7000  மதிப்பிற்கான 6 கிலோ குட்கா  பறிமுதல்
X
மன்னார்குடி அருகே திருமக்கோட்டையில் தடைசெய்யப்பட்ட6 கிலோ குட்கா பொருட்கள் கடத்தலில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்தனர்.
திருவாருர் மாவட்டம் மன்னார்குடி அருகே திருமக்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசார் இன்று வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.அப்போது அவ் வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த நபரை மறைத்து இருசக்கர வாகனத்தை சோதனை செய்த போது பொதுமக்களுக்கு கேடு விளைவிக்கக்கூடிய தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்களை கடந்த்தி வந்தது தெரிய வந்தது. தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையை சேர்ந்த பக்கிரிசாமியின் மகன் வீரக்குமார் என்பவர் சுமார் 6 கிலோ மதிப்பிலான 7 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான தடைசெய்யப்பட்ட குட்கா, கூலிப்,பான்மசாலா மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர். கடத்தலில் ஈடுப்பட்ட வீரக்குமார் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையிலடைக்கப்பட்டார். பொதுமக்களுக்கு கேடு விளைவிக்கும் கஞ்சா, தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை,மது குற்றங்களில் ஈடுபடுவோர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கருண் கரட் கடுமையாக எச்சரித்துள்ளார்.
Next Story