நெல்லையில் 70.20 மில்லி மீட்டர் மழை பதிவு

X
திருநெல்வேலி மாவட்ட பகுதிகளில் கடந்த ஒரு சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. அந்த வகையில் இன்று காலை வரை மாவட்டத்தில் 70.20 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. மாவட்டத்தில் அதிகபட்சமாக நாலுமுக்கு பகுதியில் 14 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. இன்றும் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story

