புழல் ஏரிக்கு வினாடிக்கு 707 கன அடி நீர் வரத்து அதிகரிப்பு
Tiruvallur King 24x7 |26 Sep 2024 3:06 AM GMT
திருவள்ளூர் மாவட்டம் புழல் செங்குன்றம் சுற்று வட்டாரங்களில் இரவு முழுக்க பெய்த மழையால் புழல் ஏரிக்கு வினாடிக்கு 707 கன அடி நீர் வரத்து
திருவள்ளூர் மாவட்டம் புழல் செங்குன்றம் சுற்று வட்டாரங்களில் இரவு முழுக்க பெய்த மழையால் புழல் ஏரிக்கு வினாடிக்கு 707 கன அடி நீர் வரத்து. திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் புழல் சுற்றுவட்டாரங்களில் பெய்த 7.5 சென்டிமீட்டர் மழையால் புழல் ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதியில் இருந்து வந்த மழை நீர் வரத்தால் வினாடிக்கு 707 கன அடி தண்ணீர் புழல் ஏரிக்கு வந்து நிரம்புகிறது ஏரியில் 15.87 அடி நீர்மட்டம்.(21.20அடியில் ) கொள்ளளவு: 2197 மில்லியன் கன அடி கொள்ளளவு உள்ளது (3300 மி. கன. அடி ) நீர் வெளியேற்றம் வினாடிக்கு 221 கன அடி செம்பரம்பாக்கம் ஏரிக்கு வினாடிக்கு 350 கன அடி நீர் வரத்து திருவள்ளூர் அருகே உள்ள செம்பரம்பாக்கம் ஏரிக்கு சுற்றி உள்ள பகுதிகளில் 3.7 சென்டிமீட்டர் மழை பெய்ததால் நீர்வரத்து வினாடிக்கு 350 கன அடி வருகிறது. மொத்த கொள்ளளவு 3645 மில்லியன் கன அடி. அதில் இருப்பு 1116 மில்லியன் கன அடி ஏரியின்நீர் மட்டம் 24 அடி உயரம். அதில் 12.56 அடி நீர்மட்டம் உள்ளது. நீர் வெளியேற்றம் 92 கன அடி திருவள்ளூர் மாவட்டம் பூண்டி நீர் தேக்கத்திற்கு வினாடிக்கு 280 கன அடி நீர்வரத்து. பூண்டி அணை நீர் பிடிப்பு பகுதி மூன்று சென்டிமீட்டர் மழை நீரால் வினாடிக்கு 50 கன அடியும், கண்டலேறு அணையில் இருந்து வரும் சாய் கால்வாய் கிருஷ்ணா நதி நீர் வினாடிக்கு 250 கன அடி உடன் சேர்த்து வினாடிக்கு 280 கன அடி பூண்டிக்கு வந்து நிரம்புகிறது நீர்மட்டம் 17. 90 அடி (35) கொள்ளளவு 104 மில்லியன் கன அடி (3231மி. கன. அடி ) நீர் வெளியேற்றம் பேபி கால்வாயில் 17 கன அடி சென்னை குடிநீருக்கு செல்கிறது
Next Story