ஆம்பூர் அருகே ஸ்ஃக்ராப் டைப்ஸ் காய்ச்சலால் 71 முதியவர் மருத்துவமனையில் அனுமதி..

ஆம்பூர் அருகே ஸ்ஃக்ராப் டைப்ஸ் காய்ச்சலால்  71 முதியவர் மருத்துவமனையில் அனுமதி..
X
ஆம்பூர் அருகே ஸ்ஃக்ராப் டைப்ஸ் காய்ச்சலால் 71 முதியவர் மருத்துவமனையில் அனுமதி..
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே ஸ்ஃக்ராப் டைப்ஸ் காய்ச்சலால் 71 முதியவர் மருத்துவமனையில் அனுமதி.. முதியவர் வீட்டை சுற்றி சுகாதார துறையினர் ஆய்வு செய்து, மருந்துகளை தெளிக்கும் பணி தீவிரம்.. திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பெரியாங்குப்பம் கசதோப்பு பகுதியை சேர்ந்த சுப்பிரமணி (71) என்பவர் கடந்த 31 ஆம் தேதி காய்ச்சல் காரணமாக ஆம்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார், பின்னர் அவருக்கு காய்ச்சல் அதிகமாகவே அவரை மருத்துவர்கள் வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில் அவருக்கு மருத்துவர்கள் ரத்தபரிசோதனை செய்த போது அவருக்கு ஸ்க்ர்ப் டைப்ஸ் காய்ச்சலால் இருப்பது தெரியவந்துள்ளது, உடனடியாக இதுகுறித்து திருப்பத்தூர் மாவட்ட சுகாதார துறை அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டதை தொடர்ந்து, பெரியாங்குப்பம் கசதோப்பு பகுதியில் உள்ள சுப்பிரமணியின் வீட்டை சுற்றி சுகாதார துறையினர் தூய்மை படுத்தி, மருந்து தெளிக்கும் பணியில் ஈடுப்பட்டனர்.. அதனை தொடர்ந்து திருப்பத்தூர் மாவட்ட இளநிலை பூச்சியல் வல்லுநர் சீனிவாசன் கசதோப்பு பகுதியில் ஆய்வு மேற்க்கொண்டதையடுத்து, அப்பகுதியில் சுகாதாரதுறையினர் மருத்துவமுகாமினை நடத்தி அப்பகுதி மக்களுக்கு மருத்துவ பரிசோதனை மேற்க்கொண்டு வருகின்றனர்...
Next Story