சேலம் மாவட்டத்தில் ரூ.71½ கோடியில் பல்வேறு புதிய திட்டப்பணிகள்

சேலம் மாவட்டத்தில் ரூ.71½ கோடியில் பல்வேறு புதிய திட்டப்பணிகள்
X
அமைச்சர்கள் கே.என்.நேரு, ராஜேந்திரன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்
சேலம் மாநகராட்சியில் கொண்டலாம்பட்டி, அம்மாபேட்டை, சூரமங்கலம் மற்றும் அஸ்தம்பட்டி ஆகிய மண்டலங்களில் புதிய திட்டப் பணிகளுக்கு அமைச்சர்கள் அடிக்கல் நாட்டியும், முடிவுற்ற திட்ட பணிகளையும் திறந்து வைத்தனர். சேலம் மாநகராட்சி, மாவட்டத்தில் நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் மொத்தம் ரூ.71½ கோடி மதிப்பிலான பல்வேறு புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில் அமைச்சர் கே.என்.நேரு பேசுகையில், சேலம் மாவட்டத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் கடந்த 4 ஆண்டுகளில் சேலம் மாநகராட்சிக்கு மட்டும் ரூ.1,962 கோடியும், 6 நகராட்சிகளுக்கு ரூ.387.30 கோடியும், 31 பேரூராட்சிகளுக்கு ரூ.180.68 கோடியும் என மொத்தம் ரூ.2,577.90 கோடி மதிப்பில் பல்வேறு பணிகள் நடைபெற்று முடிந்துள்ளது என்றார். தொடர்ந்து அமைச்சர் ராஜேந்திரன் பேசும்போது, கடந்த 4 ஆண்டுகளில் சேலம் மாவட்ட மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகளில் சுமார் ரூ.3,000 கோடி மதிப்பீட்டில் சாலை வசதி, மழைநீர் வடிகால் வசதி, பாதாள சாக்கடைத்திட்டப்பணிகள் என பல்வேறு திட்டங்களை அமைச்சர் கே.என்.நேரு செயல்படுத்தியுள்ளார். எனவே முதல்-அமைச்சரால் கொண்டு வரக்கூடிய அனைத்து திட்டங்களையும் பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார்.
Next Story